Asianet News TamilAsianet News Tamil

இதனால்தான் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டிருக்கு ! நிர்மலா சீத்தாராமனின் புதிய கண்டுபிடிப்பு !!

ஆட்டோமொபைல் துறையில் ஏன் மிகப் பெரிய  சரிவு ஏற்பட்டுள்ளது  ? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

automobile dept loss the reason
Author
Chennai, First Published Sep 10, 2019, 9:00 PM IST

இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்த பொருளாதார சரிவு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையை கடுமையாக பாதித்துள்ளது. டிவிஎஸ், அசோக் லேலாண்ட், மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இதனால் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 

automobile dept loss the reason

அதேபோல் வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தையும் பிடித்து வருகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 100 சாதனை குறித்து பேட்டி அளித்தார்.

automobile dept loss the reason

அப்போது பேசிய அவர் பொது மக்கள் வாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தவிர நிர்மலா சீத்தாராமன் சொல்லியுள்ள வேறு பல காரணங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

automobile dept loss the reason

அதாவது, பிஎஸ்6 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு காரணம், தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வாகனம் வாங்கும் ஆசை குறைந்துள்ளது…. . பொதுவா இளைஞர்கள் இப்போது இஎம்ஐ கட்ட விரும்புவதில்லை இப்படியெல்லாம் அவர் சொன்ன காரணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios