Asianet News TamilAsianet News Tamil

’கவர்ச்சி உடையில்தான் நாடாளுமன்றத்துக்கு வருவோம்...’ அடம்பிடிக்கும் எம்.பி நடிகைகள்..!

’எங்களது ஆடைகள் முக்கியமானவை அல்ல. நாங்கள் இளம்பெண்கள், ஏன் ஜீன்ஸ், டிசர்ட் அணியக்கூடாது? அப்படித்தான் நாடாளுமன்றத்துக்கு வருவோம் என இளம் எம்பிக்களான நடிகைகள் மிமி சக்ரபோத்தியும், நுஸ்ரத் ஜகான் ஆகியோர் அதிரடியாக கிளம்பி உள்ளனர். 
 

Attractive to come to parliament
Author
India, First Published Jun 1, 2019, 2:46 PM IST

’எங்களது ஆடைகள் முக்கியமானவை அல்ல. நாங்கள் இளம்பெண்கள், ஏன் ஜீன்ஸ், டிசர்ட் அணியக்கூடாது? அப்படித்தான் நாடாளுமன்றத்துக்கு வருவோம் என இளம் எம்பிக்களான நடிகைகள் மிமி சக்ரபோத்தியும், நுஸ்ரத் ஜகான் ஆகியோர் அதிரடியாக கிளம்பி உள்ளனர். Attractive to come to parliament

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தியும், பசிராத் தொகுதியில் 29 வயது நடிகை நுஸ்ரத்தும் வெற்றிபெற்றனர். முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள இருவரும் மாடர்ன் உடையில் சென்று தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Attractive to come to parliament

இந்த புகைப்படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டனர். நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் அணிந்து அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Attractive to come to parliament
இதற்கு பதிலளித்துள்ள மிமி, ’’நாங்கள் இளம்பெண்கள், ஏன் ஜீன்ஸ், டிசர்ட் அணியக்கூடாது? இவர்கள் எங்கள் ஆடைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால் குற்ற பின்னணி கொண்டு ஊழல் மிகுந்து கறை படிந்திருந்தாலும் புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? நான் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.Attractive to come to parliament

அவர்கள் அணிவதையே நான் அணிவதை பார்க்கும் இளைஞர்கள் பெருமிதம் அடைவார்கள். திரைப்பட வாழ்க்கையால் தான் அரசியலில் நுழைந்து இருக்கிறேன். இளைஞர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள அதிக காலம் எடுக்கும். இளம் பருவமுடைய ஆண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஜீன்ஸ் அணிந்து வந்தால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், இதையே ஒரு பெண் செய்துவிட்டால் பிரச்சனை எழுந்துவிடுகிறது’’ என தெரிவித்துள்ளார்.Attractive to come to parliament

இது குறித்து நுஸ்ரத், ’’எனது ஆடைகள் முக்கியமானவை அல்ல. என்னுடைய வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக கேள்வி கேட்டவர்களுக்கு எனது வெற்றி எவ்வாறு விடையாக அமைந்ததோ அதுபோல எனது பணி இத்தகைய கேலிகளுக்கு எல்லாம் விடையாக இருக்கும். இது ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். ஆனால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நேரமிது. இது உடனடியாக நடந்துவிடப் போவதில்லை. ஆனால், புரிந்துகொள்ளுதல் தொடங்கியுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Attractive to come to parliament

கவர்ச்சிக்கு அதிரடியாக பேர்போன தெலுங்கு தமிழ் நடிகயான நவ்னீத் கவுரும் மகாராஷ்டிரா, அமராவதி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கவர்ச்சி பதுமையான இவரும் மாடர்ன் உடையில் நாடாளுமன்றத்தை கலங்கடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆக மொத்தத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அனலை கிளப்புகிறதோ இல்லையோ இந்த மாடர்ன் மங்கைகள் ஹாட் கிளப்பப்போவது உறுதி..!Attractive to come to parliament

Follow Us:
Download App:
  • android
  • ios