குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற இஸ்லாமியர்களுக்கு 110-ன் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். 

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5-வது நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் நீதிமன்ற தடையை மீறி இஸ்லாமியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அடையாள அட்டை, தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு நிறைவு பெற்றது. 

இதையும் படிங்க;- ஒரே ஒரு கடிதம்... மாஸ் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்... வாயடைத்து போன மு.க.ஸ்டாலின்...!

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி என்றும் அறிவித்தார்.

இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் பேசும் போது இஸ்லாமியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பாதுகாப்பு அரணாக விளங்குகிறார் என கூறியுள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.