2 Minutes நியூஸ்: பாக்கெட்டில் 10 பைசா இல்லாத முகேஷ் அம்பானி... ஈரானில் பயங்கர நிலநடுக்கம்... சேதம் பற்றி தெரிந்துகொண்ட பிரதமர்..!(வீடியோ)
ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக,
கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர்.
தமிழகத்தில் ஓக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்....
பலதுறை தலைவர்கள் பங்குபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி பணம் குறித்து நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை
.என் வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. என் வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு பொருளாகவே பணத்தை இதுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.
புதிய சவால், வியாபார அச்சுறுத்தல்களை களைய எனக்கு பணம் உதவுகிறது. சிறுவயது முதலே என் சட்டைப் பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார். என்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.