Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் கெத்து காட்டும் கெஜ்ரிவால்... மீண்டும் மோடியை வீழ்த்தும் ஆம் ஆத்மி!

டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்கள் தேவை. மெஜாரிட்டி இடங்களைத் தாண்டி தற்போது ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. எனவே டெல்லி தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் ஆக இருக்கிறார். 

Aravind kejriwal got victory in delhi election
Author
Delhi, First Published Feb 11, 2020, 9:55 AM IST

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார்.Aravind kejriwal got victory in delhi election
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப். 8 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 61.5 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காலை. 9.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 51 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. காங்கிரஸ் ஓரிடத்திலும் முன்னிலை பெறவில்லை.

Aravind kejriwal got victory in delhi election
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்கள் தேவை. மெஜாரிட்டி இடங்களைத் தாண்டி தற்போது ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. எனவே டெல்லி தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் ஆக இருக்கிறார். கடந்த 2013-ல் காங்கிரஸ் ஆதரவுடன் 6 மாதங்கள் முதல்வராக இருந்தார் கெஜ்ரிவால். 2015 தேர்தலில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வரனார்.

 Aravind kejriwal got victory in delhi election
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios