Asianet News TamilAsianet News Tamil

எங்க கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குனா அவங்க தலைய வெட்டுவோம் !! சிவசேனா எம்எல்ஏ மிரட்டல் !!

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குபவர்களின் தலையை வெட்டுவோம். கால்களை உடைப்போம்'' என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ., அப்துல் சதார் மிரட்டல் விடுத்துள்ளார்.
 

anybody try to buy sivasena mla we will  killed told mla
Author
Mumbai, First Published Nov 21, 2019, 10:13 PM IST

பொதுவாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது ஆட்சியைக் காப்பாற்றவோ எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவோ முயற்சி செய்வார்கள். கடுமையான குதிரை பேரம் நடக்கும். எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் கொடுக்க அரசியல் கட்சியாக தெடியாக இருக்கின்றனர்.

குறிப்பாக கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்களை  பாஜக கட்சியினர் விலைக்கு வாங்கி குமாரசாமி ஆட்சியை  கவிழ்த்ததாக கூறப்படுகிறது.அப்படி நிலைமை மகாராஷ்ட்ராவில் வந்துவிக் கூடாது என்பதில் சிவசேனா முன்னெச்சரிக்கையாக உள்ளது.

anybody try to buy sivasena mla we will  killed told mla

இந்லையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது. டிசம்பர் ., முதல் வாரத்திற்குள் ஆட்சி அமைப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாஜக ., இழுக்கலாம் என்ற அச்சத்தில், சிவசேனா கட்சி, தங்கள் எம்எம்ஏக்களை மும்பையில் உள்ள சொகுசு விடுதியிலும், காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ,க்களை ராஜஸ்தானில் தங்க வைத்தது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை, பாஜக , நிராகரித்துவிட்டது.

anybody try to buy sivasena mla we will  killed told mla

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சி எம்எல்ஏ., அப்துல் சதார் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டவர்களை விலைக்கு வாங்குவதும், கடத்தி செல்வதும் சட்ட விரோதம். 

எங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை விற்க, நாங்கள் ஒன்றும் வணிக கடை நடத்தவில்லை. எங்கள் எம்எல்ஏ. க்களை கடத்தவோ , விலைக்கு வாங்கவோ முயற்சி செய்தால், அவர்களின் தலையை வெட்டுவோம் என அதிரடியாக தெரிவித்தார்.

anybody try to buy sivasena mla we will  killed told mla

தொடர்ந்து பேசிய அவர் அவர்களின் காலை உடைப்போம். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி கொடுப்போம் என மிரட்டல் விடுத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios