Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை விட கொடிய நோய் வரப்போகுது... டிசம்பரில் பேரழிவு... இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் அதிரடி கணிப்பு..!

 வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி, உலகை தாக்கும் புதிய பேரழிவு, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

another impact will occur in dec young astrologers prediction
Author
India, First Published Apr 8, 2020, 8:17 AM IST

கொரோனா வைரஸின் தாக்கத்தைச் சென்ற ஆண்டே கணித்த சிறுவன் எனப் பிரபலம் பெற்ற இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் சில நாட்களுக்கு முன் உலகம் வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தினை எதிர் கொள்ளும் என்று சொல்லியிருந்தார்.

14 வயதுடை அபிக்யா அமெரிக்கா வாழ்பவர். Conscience எனும் பெயரில் அவரது ஜோதிடக் குறிப்புக்களின் உரைகள் வெளியிடப்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களிலும், அடுத்த ஆண்டிலும், உலகில் என்ன நடக்கலாம் என்பது பற்றி சில தினங்களின் முன் விரிவாகச் சொல்லியிருக்கின்றார்.

 another impact will occur in dec young astrologers prediction

கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கு முன்பே, 'உலகிற்கு ஆபத்து' என, எச்சரிக்கை விடுத்த, இளம் ஜோதிடர், அபிக்ஞா ஆனந்த், வரும் டிசம்பர் மாதம் மற்றொரு பேரழிவு ஏற்படும் என, எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும், வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த இளம் ஜோதிடர் அபிக்ஞா ஆனந்த்  கடந்த ஆகஸ்ட் மாதமே, சமூக வலைதளத்தில் ஒரு, 'வீடியோ' வெளியிட்டார்.

'நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020வரை உலகிற்கு மிகப்பெரும் ஆபத்து' என, தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி வரும், கொரோனா வைரசின் தாக்குதல், மே, 31ம் தேதியுடன் முடிவுக்கு ஜூன், 31ம் தேதி வரை பாதிப்பு தொடரும். அது வரையிலும் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்காது' என, கூறியிருந்தார்.another impact will occur in dec young astrologers prediction

இந்நிலையில், அபிக்ஞா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 'இந்த ஆண்டு, டிசம்பர், 20ம் தேதி, உலகிற்கு மற்றொரு பேரழிவு ஏற்படும்' என, தெரிவித்து உள்ளார். வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி, உலகை தாக்கும் புதிய பேரழிவு, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்

.another impact will occur in dec young astrologers prediction

இது கொரோனா தொற்றை விட கொடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால் மட்டுமே புதிதாக உருவாகும் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். விலங்குகளை கொல்வதை நிறுத்த வேண்டும். இயற்கைக்கு எதிரான நமது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios