Asianet News TamilAsianet News Tamil

இரவோடு இரவாக தூர்வாரப்பட்ட ஏரி... செந்தில் பாலாஜி – அன்பில் மகேஸ் டீமுக்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்..!

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளை தூர்வார திமுக தரப்பு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இரவோடு இரவாக தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

Anbil Poyyamozhi, senthil balaji shock
Author
Tamil Nadu, First Published Sep 12, 2019, 11:03 AM IST

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளை தூர்வார திமுக தரப்பு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இரவோடு இரவாக தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக நீர்நிலைகளை அரசே தூர்வாரி வருகிறது. இதேபோல் திமுக இளைஞர் அணியும் தங்கள் பங்குக்கு அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு தரப்பும் எதிர்கட்சியான திமுக தரப்பும் ஒரே பணியை செய்யும் நிலையில் இந்த விவகாரம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சனையாக உருவெடுத்தது. Anbil Poyyamozhi, senthil balaji shock

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நெடுங்கூர், கஞ்மனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்த ஏரிகளை திமுக இளைஞர் அணி சார்பில் தூர்வார ஏற்பாடுகள் நடைபெற்றன. நேற்று காலை திமுக இளைஞர் அணி துணைச் செயலாளரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் தூர்வார செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். Anbil Poyyamozhi, senthil balaji shock

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடிரென அந்த ஏரிகளுக்கு வந்த அதிகாரிகள் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாறினர். முதலில் இந்த விவகாரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காலை விடிந்த பிறகு தான் அந்த ஏரிகள் தூர்வாறப்பட்ட விஷயமே மக்களுக்கு தெரியவந்தது. அதே சமயம் அங்கு தூர்வாறும் பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Anbil Poyyamozhi, senthil balaji shock

ஒரு பக்கம் அரசு அதிகாரிகள் தூர்வாறும் பணியை மேற்கொண்ட நிலையில் மறுபக்கம் திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் கட்சியினருடன் இணைந்து தூர்வாறினர். ஒரே ஏரியை இரண்டு தரப்பும் தூர்வாறியதால் வேலை வேகமாக முடியும் என்று மக்கள் கூறினர்.

இதற்கிடைய அமைச்சர் விஜயபாஸ்கரும் அங்கு வர பதற்றம் தொற்றிக் கொண்டது. இதனை அடுத்து உரிய அனுமதி இல்லாமல் தூர்வாறக்கூடாது என்று கூறி திமுக தரப்பை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து பேசிய விஜயபாஸ்கர், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாற அரசு முடிவெடுத்துள்ளது. இதனை தெரிந்து வேண்டுமென்றே விளம்பரத்திற்காக திமுக இது போல் செய்வதாக குற்றஞ்சாட்டினார் அமைச்சர். Anbil Poyyamozhi, senthil balaji shock

ஆனால், நாங்கள் தூர்வாறுவதாக அறிவித்த பிறகு தான் அரசு அவசர அவசரமாக இந்த வேலையை செய்ததாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. இது குறித்து விசாரித்த போது திமுகவினர் கூறிய குளங்களுக்கு தூர்வாறுவதற்கான பணிகளை அதாவது பூர்வாங்க பணிகளை கருர் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே செய்து வந்திருப்பது தெரியவந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios