Asianet News TamilAsianet News Tamil

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி முன் ஸ்டாலினை அடக்கிய அன்பழகன்... அதிர வைக்கும் ஃப்ளாஷ்பேக்..!

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது வாரிசு மோதல் உச்சத்தில் இருந்தது. 
 

Anbazhagan suppresses Stalin in front of Karunanidhi at Cauvery Hospital
Author
Tamil Nadu, First Published Mar 7, 2020, 12:27 PM IST

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது வாரிசு மோதல் உச்சத்தில் இருந்தது. Anbazhagan suppresses Stalin in front of Karunanidhi at Cauvery Hospital

மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியும் கட்சியின் தலைவர் பதவி குறித்தும் வெளியாகும் செய்திகளால் கொந்தளிப்பில் இருந்தார் மு.க.அழகிரி. ‘தலைவர் சிகிச்சையில் இருக்கும்போதே, செயல் தலைவர் பதவியை அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. இப்போது அதற்கான அவசரச் சூழல் எங்கே வந்தது?’என ஆவேசப்பட்டார் அழகிரி. ஆனால், ‘தலைவர் இருக்கும்போதே செயல் தலைவர் பதவியைக் கொண்டு வர வேண்டும்’என்பதில் அப்போது பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் தரப்பு உறுதியாக இருந்தது.

கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் நிலவும் வார்த்தைப் போர்களால் கருணாநிதியை போலவே, அதிகம் கவலைப்பட்டார் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதிக்கு சிகிச்சை தொடர்வதுபோல, குடும்பத்திற்குள்ளும் பஞ்சாயத்துக்கள் நீண்டு கொண்டே போவதை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார். கட்சியின் எதிர்காலம் மற்றும் தலைவர் குடும்பத்தின் நலன்கள் குறித்தும் விரிவாகவே கருணாநிதியிடம் விவாதித்தார்.Anbazhagan suppresses Stalin in front of Karunanidhi at Cauvery Hospital

ஒருகட்டத்தில், ‘இந்தக் கட்சியை இத்தனை ஆண்டுகாலமாக காப்பாற்றி வந்தது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுச் சென்றபோது, வேறு ஒருவராக இருந்திருந்தால் கட்சியை விட்டுச் சென்றிருப்பார். எவ்வளவோ எதிர்ப்புகளையும் தோல்வியையும் தாங்கிக் கொண்டு கட்சியை முன்னேற்றியவர் அவர். அவருக்குப் பின்னால் யார் இந்தக் கட்சியை வழிநடத்தப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கருணாநிதிக்கு மட்டும் ஸ்டாலின் வாரிசு இல்லை. எனக்கும் அவர்தான் வாரிசு. குடும்பத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான், கட்சி நிர்வாகத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி முடிவு செய்ய முடியும்’என கண்டிப்பான குரலில் கொந்தளித்தார் பேராசிரியர். அவரது வார்த்தைகளைத் தாண்டி, பொருளாளர் ஸ்டாலினால் எதுவும் பேச முடியவில்லை.  

Follow Us:
Download App:
  • android
  • ios