பிறந்த நாளில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த ஆனந்தராஜ்...!(வீடியோ)
நடிகர் ஆனந்த ராஜ் தனது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் டான் பாஸ்கோ எதிரேயுள்ள கில்ட் ஆப் சர்விஸ் மகளிர் ஆசிரமத்தில் தன்னுடைய குடும்பத்தினர் அனைவருடனும் வந்து அங்குள்ள மாணவிகளுக்கு மதிய உணவு அளித்து விட்டு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்...
அப்போது இது அம்மாவின் ஆட்சி என்று நிரூபிக்கும் விதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக கூட நிதி பெற்று டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தைகளுக்கும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆனந்தராஜின் பேட்டி இதோ...