எடியூரப்பாவுடன் அகோரிகளை சந்தித்த அமித்ஷா…. சோபாவில் அமர வைத்து பேச்சு…

பெங்களூரு வந்த பாஜக தலைவர் அமித் ஷா,  கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுடன் 4 அகோரிகளை சந்தித்துப் பேசினார். அவர்களை ஷோபாவில் அமர வைத்து அவர்களுடன் இருவரும் பேசினர்.

amithsa and ediyurappa meet agories

பொதுவாக அகோரிகள் என்றவுடன் நமது நினைவிற்கு வருவது டைரக்டர் பாலாவின் நான் கடவுள் படத்தில் வரும் ஆர்யா கதாபாத்திரம் தான்.  வட இந்தியாவில் அகோரிகளை பற்றி புரிதல் அதிகம் ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறு இல்லை.

கடவுளை அடைய ஒவ்வொருவரும் சாதுக்களும் ஒரு வழிகளில் முயற்சிப்பார்கள்  அதில் சில சாதுக்கள் வழக்கத்திற்கு மாறான சில பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு .பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள் உதாரணமாக மயான பூமி. 

amithsa and ediyurappa meet agories

இவ்வகை சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது. . அவர்கள் தான் நாம் அகோரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அகோரிகள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள்,உடலில் ஆடைகள் இல்லாமல்,அகோரிகள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது.சிறு சிறு குழுக்களாகவும் ஒரு தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.தங்களை விளம்பரபடுத்திக் கொள்ளவோ தங்களுக்கு இருக்கும் அமானுஷய ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

amithsa and ediyurappa meet agories

இந்நிலையில்தான் பெங்களூரு வந்த பாஜக தலைவர் அமித்ஷா, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுடன் 4 அகோரிகளை சந்தித்துப் பேசினர்.  அந்த 4 அகோரிகளையும் ஷோபாவில் அமர வைத்து இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.

பொதுவாக பாஜக அரசை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்த அமைப்புகள் தான் இயக்கி வருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷாவும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் அகோரிகளை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios