Asianet News TamilAsianet News Tamil

ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மீது எங்களுக்கு அக்கறை இல்லையா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக மறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்ளவில்லை. சோனியா காந்தி குடும்பத்துக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 

Amith sha on Sonia Gandhi family
Author
Delhi, First Published Nov 27, 2019, 10:24 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.Amith sha on Sonia Gandhi family
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில்  'சிறப்பு பாதுகாப்பு சட்டம்' தொடர்பான சட்ட திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்து, விவாதத்தைத் தொடங்கிவைத்து பேசினார். “காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்ளவில்லை. சோனியா காந்தி குடும்பத்துக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Amith sha on Sonia Gandhi family
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. சோனியா காந்தியின் குடும்பத்தினர் எஸ்.பி.ஜி.க்கு தகவல் தெரிவிக்காமல் 600 முறை வெளியே சென்றுள்ளார்கள். இதில் ராகுல் காந்தி 1892 ,முறை இந்தியாவிலும் 247 முறை வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளார். பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.” என்று அமித் ஷா தெரிவித்தார். இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios