Asianet News TamilAsianet News Tamil

யமுனை நதிக்கரையில் டூயட் பாட உள்ள ட்ரம்ப்...!! மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலில் காதல்...!!

அங்கு  இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன .  அதன்பிறகு  ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார் , முன்னதாக  அங்கு பாயும்  யமுனை ஆற்றில் தண்ணீர் பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது ,

american president trump  visit India , and also plan to visit taj mahal  with his wife
Author
Delhi, First Published Feb 20, 2020, 11:51 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு ஆக்ரா மற்றும் அஹமதாபாத்  நகரங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.    அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நண்பனும் அல்ல எதிரியும் அல்ல என்ற நிலை நீடித்து வருகிறது .   இந்நிலையில் அமெரிக்காவை எப்போதும் தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுவருகிறது .  பிரதமர் மோடியும் அதையே விரும்புகிறார் .  கடந்த ஆண்டு  அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன்  கைகோர்த்து தோழமையை வெளிப்படுத்தினார் மோடி . இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

american president trump  visit India , and also plan to visit taj mahal  with his wife 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன்  வரும் 24ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார் ,   குஜராத் மாநிலம் அகமதாபாத் வரவுள்ள அதிபர் டிரம்ப் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .  வரும் 24ஆம் தேதி மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதும் அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார் ,  அத்துடன் பிரதமர் மோடியுடன் 22 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை மார்க்கமாக பயணித்து அங்குள்ள மோட்டாரோ அரங்கத்தை சென்றடைகிறார் ,  இருவரும்  பயணிக்கும் சாலையை விரிவாக்கம் செய்தல் ,  புதுப்பித்தல் ,  மற்றும் வர்ணம் பூசுதல் ,  ஓவியங்கள் வரைதல்,  என அழகுற செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன .   முதலில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு அதன் பிறகு உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கான     மோட்டாரோ மைதானத்தை திறந்து வைக்கிறார் ட்ரம்ப்,  

american president trump  visit India , and also plan to visit taj mahal  with his wife

பின்னர் மோடியுடன் டெல்லி சென்று , அங்கு  இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன . அதன்பிறகு  ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார் , முன்னதாக  அங்கு பாயும்  யமுனை ஆற்றில் தண்ணீர் பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது , தொடர்ந்து  2 நாட்களுக்கு  தண்ணீரைத் திறந்து விடுவதன் மூலம் நதி தூய்மையடைவதோடு அந்தப் பகுதியில் காற்று மாசு குறையும் என்று நம்பப்படுகிறது .  அதேபோல் ஆக்சிஜனின் தரம் உயரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  ட்ரம்ப் வருவதையொட்டி ஆக்ரா மற்றும் டெல்லியிலும் அவர் பயணிக்கும் சாலைகளில்  மேம்பாலங்கள் தூய்மைப்படுத்தும் பணி,  அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios