Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை இருந்தா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்சுட்டு தனியா நில்லுங்க.. நயினாருக்கு பதிலடி கொடுத்த அதிமுக ..!

அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு, தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன்? 

AIADMK retaliates against Nayyar Nagendran
Author
Tamil Nadu, First Published Jan 26, 2022, 7:09 AM IST

சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரைக்கூட பார்க்க முடியவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதுதான் ஹைலைட் ஆகியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பேசுகையில், திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. ஆனால், இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது.

AIADMK retaliates against Nayyar Nagendran

இதற்கு பின்பு அவர்கள் ஆட்சி நீடிக்காது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை பாஜகதான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்கட்சியாக இல்லாமல் இருந்தாலும், ஊடகங்களுக்கு துணிச்லோடு பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என அவர் தெரிவித்திருந்தார்.

AIADMK retaliates against Nayyar Nagendran

இவரது பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பு மற்றும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக தோள் மேல் தொத்திக்கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்கள் என அதிமுக ஐடிவிங்கை சேர்ந்த ராஜ் சத்யன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை ஐடிவிங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன்? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios