Asianet News TamilAsianet News Tamil

3 ஆண்டுகளுக்கு பிறகு 5- 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..!

பாஜக கொண்டுவந்தாலும் உடனே அமல்படுத்துவிங்களா.? அப்பறம் எதுக்கு சட்ட மன்றம்.? அதுக்கும் மத்திய அரசு கொண்டுவருகிறது என அமல்படுத்துவிங்களா.? 

After 3 years public exam for 5th and 8th std
Author
Tamil Nadu, First Published Sep 17, 2019, 3:50 PM IST

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழகத்திற்கு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 After 3 years public exam for 5th and 8th std

இது குறித்து அவர் தனது ட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

After 3 years public exam for 5th and 8th std

ஆகவே, 3 ஆண்டு காலத்தில் மாணவர்கள் தங்களுடைய அறிவு ஆற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இன்று எந்த நிலை உள்ளதோ இதே நிலை தான் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு தொடரும்’ என அவர் தெரிவித்துள்ளார். After 3 years public exam for 5th and 8th std

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மாநில அரசாங்கம் எதுக்கு ? மண்டியிடுவதற்கா ??? அநியாயத்தை தட்டி கேட்க தான் நீங்கள் , வழக்கு போடலாமே? இது தான் அம்மா வழியா? இப்படித்தான் அனிதாவை கொலை செய்தீர்கள். இன்னும் 3 வருடம் கழித்து இன்னும் நிறைய அனிதாகள் காத்திருக்கின்றனர். பாஜக கொண்டுவந்தாலும் உடனே அமல்படுத்துவிங்களா.? அப்பறம் எதுக்கு சட்ட மன்றம்.? அதுக்கும் மத்திய அரசு கொண்டுவருகிறது என அமல்படுத்துவிங்களா.? அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு இப்படி பாஜகவுக்கு வேலை செய்யாதீர்கள் என எதிர்ப்பை கூறி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios