Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை என்பது சாரணர் தேர்தலில் வெற்றி பெறுவது... ஹெச்.ராஜாவை பங்கம் செய்த அதிமுக..!

விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக கர்நாடக அரசை ஆண்மையுள்ள அரசு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதற்கு, ““ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல்.” என்று அதிமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ADMK slam BJP National Secretary H.Raja
Author
Chennai, First Published Aug 20, 2020, 8:49 AM IST

விநாயகர் சதுர்த்தி விழா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகளும் பாஜகவும் பேசிவருகிறது. மேலும் அதிமுக அரசையும் பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

ADMK slam BJP National Secretary H.Raja
 இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து ட்விட்டரில் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கோவை சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்.” என்று பதிவிட்டுள்ளர். மேலும் ஆண்மகன் என்பதை ஹாஸ்டேக்கிலும் பதிவிட்டுள்ளார் கோவை சத்யன். இதனையடுத்து பாஜகவினர் பலரும் அதிமுகவுக்கு எதிராக காரசாரமாக விமர்சித்துவருகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios