Asianet News TamilAsianet News Tamil

இத்தனை சதவீதம் சீட் ஒதுக்கினாத்தான் கூட்டணி ! முரண்டு பிடிக்கும் விஜயகாந்த்… அதிர்ச்சியில் அதிமுக !!

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத அளவுக்கு சீட் ஒதுக்கினால்தான் கூட்டணி என தேமுதிக மிரட்டி வருவதால் அதிமுக தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 

admk and dmdk local body election
Author
Chennai, First Published Nov 18, 2019, 10:55 AM IST

வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அநேகமாக டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிலாம் என தெரிகிறது. இந்த தேர்தலிலும் மக்களவைத் தேர்தல் போல் அதிமுக கூட்டணியில்  ஏற்கனவே ,ருந்த கூட்ட தொடர வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக, பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் என கூட்டணியில் இருந்தன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று தேமுதிக, தமாகா அறிவித்துவிட்டன. அதிமுகவை முந்திக்கொண்டு சுதீஷ் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவையும் நியமித்துவிட்டது. தமாகாவைப் பொறுத்தவரை ஆவடி, திருப்பூர் மாநராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

admk and dmdk local body election

ஆனால்  அதிமுக சார்பில் இன்னும் தோழமைக் கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக இன்னும் முறைப்படி பேச ஆரம்பிக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம்  பேசிய தேமுதிக குழுவினர், “மக்களவைத் தேர்தல் மாதிரி கசப்பான சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாதுனுதான் நாங்க முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராயிட்டோம். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செஞ்சாரு. இந்த நிலைமையில உள்ளாட்சிப் பதவிகள்ல 25% இடங்களை கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கணும்” என்று  கேட்டுள்ளனர்.

admk and dmdk local body election

இதை  சற்றும் எதிபார்ககாத அதிமுக பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஒடத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் வெளிநாட்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் திருப்பியதும் இது குறித்து பேசலாம் என கூறி தற்காலிகமாக சமாளித்து வைத்துள்ளனர்.

கூட்டணி கட்சிகள் கேட்கும் அளவை நினைத்தால் உள்ளாட்சித் தேர்லில் அதிமுக ஒரு இடத்தில் கூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என ரத்தத்தின் ரத்தங்கள் சிரித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios