நான் யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு சீமான் குறித்து பேசவில்லை ,  நான் பார்த்தவரையில் சீமானும் சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான ஒரு கட்சியான என நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார் . சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட சீமான் குறித்த சில வீடியோக்கள் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .  இந்த வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவித்த சீமான் ,  ஒரு சாதாரண விஷயம் என கடந்துசென்றுவிட்டார்.   ஆனால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அதன் உறுப்பினர்களும்  சீமானுக்கு எதிராக பேசிவரும் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்தும் தாக்கியும் பேசி வருகின்றனர் . 

இதில் நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகியும்  பேச்சாளர்களில் ஒருவருமான காளியம்மாள் விஜயலட்சுமி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் மீண்டும்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி சீமானுக்கும்  தனக்கும் இடையே என்ன நடந்தது ஏன் இந்த வீடியோவை வெளியிட்டேன் என்று விளக்கம்  அளித்துள்ளார் . அதில்,  இந்தப் போராட்டம் எனக்கும் சீமானுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் . இப்போது கூட நான் சொல்கிறேன் என் பின்னால் எந்த கட்சியும் எந்த  அரசியல் தலைவர்களும் இல்லை ,  தமிழகத்தில் எத்தனையோ காட்சிகள் இருக்கிறது எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள் .  அதிமுகவில் ஜெயலலிதா அம்மா இருந்த வரை பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்,  அதேபோல் திமுக  , காங்கிரஸ் ,  பாஜக உள்ளிட்ட கட்சிகளில்  யாரும் உங்களுக்கு உயிர் பயம் தர மாட்டார்கள் .

 

இதற்கு முன்பாக பேசிய சீமானின் வழக்கறிஞர் ,  அவங்களை எல்லாரையும் அன்பா பார்க்க சொல்லுங்க என பேசியிருந்தார் ,  முதலில் சீமானை எல்லோரையும் அன்பாகவும்,  மரியாதையாகவும் பேச சொல்லுங்கள் .  நான் பார்த்தவரையில் சீமானும் சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி . பலர் என்னிடம் சீக்கிரம் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் பாதுகாப்புகேள்  என்று சொல்கிறார்கள் .   சீமானால் நான் பல துன்பங்களை அனுபவித்து உள்ளேன் ,  என்னை ஏன் கடவுள் இன்னும் உயிருடன் வைத்திருக்கிறார்  என்று பார்த்தால் நான் பட்டது போல வேறு எந்த பெண்ணும் படாமல் இருக்க வேண்டும் என்று தான்.  நான் ஒன்றை சொல்கிறேன்  யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு நான் இதைச் செய்யவில்லை ,  காளியம்மாள் என்னை தரக்குறைவாக பேசுகிறார் அவருக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது யார் ,  சீமான் தானே.?  எனக்கு அச்சுறுத்தலை கொடு என்று சொல்வது சீமான் தானே.?  என விஜயலட்சுமி கேள்வியெழுப்பியுள்ளார்.