மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் கவர்ச்சி நடிகை ஷகிலா. இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது எல்லாம் ஒரு காலம். தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஷகிலா இணைந்துள்ளார். சென்னையில் தமிழக காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து அவருக்கு தமிழக காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் மாநில பொதுச் செயலாளர் பதவி உடனடியாக வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இணைந்ததையடுத்து  சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று வருகை தந்து கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச இருக்கிறார். இதன்பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஷகிலா ஈடுபடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.