Asianet News TamilAsianet News Tamil

ராமர் சிலை செருப்பால் அடிக்கப்பட்டது உண்மைதான், ரஜினி பேசியது சரிதான்...!! தானாக வந்து மாட்டிக்கொண்ட பெரியாரிஸ்டுகள்...!!

அதாவது தஞ்சை மருதவாணன் என்பவர் தொகுத்துள்ள 1912 லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகத்தில் அந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
 

actor rajini speech is not falls truth - now got witness for Hindu idols  ignominy
Author
Chennai, First Published Jan 25, 2020, 12:07 PM IST

சேலத்தில் நடைபெற்ற தி.க ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பால் அடித்ததை   அப்போதே  ஒப்புக்கொண்டதாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .  சில தினங்களுக்கு முன்பு நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  கடந்த 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை  பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ,  இந்துக் கடவுள்களான ராமர் சீதை புதிய படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என பேசினார் .  அவரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .  அதிமுக ,  திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் ரஜினி உண்மைக்கு புறம்பானதகவல்களை கூறுகிறார் .

 actor rajini speech is not falls truth - now got witness for Hindu idols  ignominy

தந்தை  பெரியாரின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படிபேசுகிறார் .   தன் அவதூறு பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கொந்தளித்து வருகின்றனர் ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக மறுத்துள்ளார் ,  இந்நிலையில்  அன்று பெரியார் நடத்திய அந்த பேரணியில்  நடந்தது என்ன என்பது குறித்த தேடல்களில்  ரஜினி ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர், மற்றும் வலதுசாரி  சிந்தனையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திராவிடர்  விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பால் அடித்தது  உண்மைதான் அதை அப்போதே ஒப்புக்கொள்ளப்பட்டது என்பது போன்ற செய்தி இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன.  அதாவது தஞ்சை மருதவாணன் என்பவர் தொகுத்துள்ள 1912 லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகத்தில் அந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

actor rajini speech is not falls truth - now got witness for Hindu idols  ignominy

அந்த புத்தகத்தில் 55 ஆவது பக்கத்தில்  இடம்பெற்றுள்ள தகவல் விவரமாவது :-  1971 ஜனவரி 23 சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமன் பொம்மை செருப்பால்  அடிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது .  இதைத்தான்  துக்ளக் விழாவில் ராமர் சீதை சிலைகள் ஆடை இன்றி கொண்டு செல்லப்பட்டு அவ மரியாதை செய்யப்பட்டது என ரஜினி பேசினார் ,  தற்போது இந்த ஆதாரம் வெளியாகியுள்ள  நிலையில் தி .க மற்றும் திமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளதாக ரஜினி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios