Asianet News TamilAsianet News Tamil

டெல்லி சட்டசபைத் தேர்தல் ! யார் வெற்றி பெறுவார்கள் ? கருத்துக் கணிப்பில் புதிய தகவல் !!

ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மியே 54-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

Aam Athmi will win in assembly election
Author
Delhi, First Published Jan 6, 2020, 11:50 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்நிலையில், டெல்லி பேரவைத் தேர்தல் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனமும் சி-வேட்டரும் இணைந்து ஜனவரி முதல் வாரத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு 13,076 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கிறது.

Aam Athmi will win in assembly election

இதன்படி, ஆம் ஆத்மி 54 முதல் 64 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். பாஜக 3 முதல் 13 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். காங்கிரஸ் கட்சி 0 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம்.

இதன்மூலம், டெல்லி பேரவைத் தேர்தல் களம் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையிலான போட்டியாகவே உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், கடந்த சில பேரவைத் தேர்தல்களில் பாஜக பின்னடைவையே சந்தித்து வருகிறது.

Aam Athmi will win in assembly election
 
எனவே, இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும். அதேசமயம், ஆம் ஆத்மியும் தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கும் இது முக்கியமான தேர்தலாக உள்ளது.

2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios