"தலித் - மராத்தா மோதல்: மராட்டியத்தில் பெரும் கலவரம்!" முகநூலில் உலாவும் அதிரவைக்கும் பதிவு!
200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பீமா கோரேகான் போரின் வெற்றியைக் கொண்டாட ஏராளமான தலித் மக்கள் நேற்று பீமா கோரேகான் இடத்தில் குவிந்தனர். அப்போது இந்துத்துவா அமைப்புகள் நடத்திய தாக்குதலில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. தலித்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து மும்பை முழுவதும் பல இடங்களில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கலவரம் குறித்து சமூக வலைத்தலமான முகநூலில் ஒரு பகீர் பதிவு கண்ணில் தென் பட்டது.
ஏன் இந்த கலவரம்? எதற்காக இந்த வன்கொடுமை? இதோ.... 200 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி பெற்றதை மராட்டிய மாநில தலித் மக்கள் நேற்று முன்தினம் கொண்டாடியதாலும், SC/ST வன்கொடுமை சட்டத்தலும், அங்கு பெரும் கலவரம் நடந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 200 கார்கள் கொளுத்தப்பட்டன!
இன்றும் தலித் சமூகத்தினர் மும்பையில் சாலை மறியல் செய்ததாலும், அதற்கு எதிராக மராத்தா சமூகத்தினர் புனே நகரில் சாலை மறியல் செய்ததாலும், மராட்டிய மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் கெய்க்வாட்கள் ஆகும்.
1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த வெற்றியை பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தில் தான் தற்போது தலித்துகளுக்கும் மராத்தா சமூகத்தினருக்கும் இடையே கலவரம் நடக்கிறது.
வாது எனும் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீரசிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்று தலித் பெயரை குறிப்பிடப்பட்டது தொடர்பாக மோதல் எழுந்தது. இந்த மோதலில் 49 மராத்தா சாதியினர் மீது SC/ST வன்கொடுமை சட்டம் பாய்ந்தது. இதுவும் வன்முறைக்கு காரணம் என்கின்றனர்.
"பின்னணி வரலாறு"
ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் நினைவுநாள் நிகழ்வினை அண்ணல் அம்பேத்கர் நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது சிலர் கூறும் செய்தி ஆகும்.
200 ஆண்டுகள் கடந்து இப்போதும் இதற்காக தலித்துகளுக்கும் மராத்தா சமூகத்தினருக்கும் இடையே மராட்டிய மாநிலத்தில் சாதி மோதல் நடக்கிறது!
பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பு; முகநூலில் உலாவும் அதிரவைக்கும் பதிவு!