Asianet News TamilAsianet News Tamil

’என்னைக் கட்டிப்பிடித்தபடி நகரவிடாமல் செய்தார் தலைமை நீதிபதி’...பெண் ஊழியரின் பகீர் பாலியல் புகார்...

நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.புகார் கூறிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதோடு, நீதித்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடைபெறுவதாகவும் ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

a former employee of the Supreme Court has made allegations of sexual harassment against Chief Justice of India
Author
Delhi, First Published Apr 20, 2019, 2:58 PM IST

நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.புகார் கூறிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதோடு, நீதித்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடைபெறுவதாகவும் ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.a former employee of the Supreme Court has made allegations of sexual harassment against Chief Justice of India

2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவர், தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

அந்தப் பெண் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கோகோயின் நீதிமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, ரஞ்சன் கோகோய் தம்மிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த பெண்,”அவர் என்னுடைய அடி வயிற்றை கட்டிப்பிடித்தார். அவரது கைகளை வைத்து என்னுடைய உடலின் அனைத்து பாகங்களை தொட்டார். அவருடைய உடலை என் மீது அழுத்தி என்னை நகரவிடாமல் செய்தார். மேலும் என்னை பிடித்துக் கொள் பிடித்துக் கொள் என்று அவர் கூறினார். நான் அங்கிருந்து தப்பி விடலாம் என்று நினைத்த போது என்னை அவர் விடவில்லை என்று கூறியிருந்தார்.a former employee of the Supreme Court has made allegations of sexual harassment against Chief Justice of India

பணிநீக்கத்திற்குப் பிறகும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் துன்புறுத்தல் தொடர்வதாகவும், கடந்த மார்ச்சில் பதிவு செய்யப்பட்ட பொய்யான ஊழல் குற்றச்சாட்டில் தாம் கைது செய்யப்பட்டதாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளதாக திவயர் உள்ளிட்ட இணைய தளங்கள் செய்தி வெளியிட்டன.நடந்தவற்றை எல்லாம் விரிவாக விளக்கி அந்த பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாண பத்திரம் அனுப்பியதாகவும், செய்தி வெளியிட்ட இணைய தளங்கள் கூறியிருந்தன.

இந்நிலையில், இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டதன் அடிப்படையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று காலை அந்த சிறப்பு அமர்வு கூடியது.

தம் மீதான குற்றச்சாட்டு நம்பமுடியாததாக இருப்பதாகவும், பண விவகாரத்தில் தம்மை சிக்க வைக்க முடியாது என்பதால் இத்தகைய விவகாரங்களை எழுப்பப்படுவதாகவும் ரஞ்சன் கோகோய் கூறினார். 20 ஆண்டுகள் பணிபுரிந்து, வெறும் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கி இருப்பு வைத்துள்ள தலைமை நீதிபதிக்கு கிடைத்துள்ள பரிசு இது என்றும் அவர் குறிப்பிட்டார்.a former employee of the Supreme Court has made allegations of sexual harassment against Chief Justice of India

தம் மீதான குற்றச்சாட்டு நம்ப முடியாததாக இருப்பதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு தரம் தாழ்ந்து செல்ல வேண்டியிருக்கும் என தான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் ரஞ்சன் கோகோய் கூறினார்.

தம் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால் தாம் பதவிக் காலம் உள்ளவரை எவ்வித அச்சமுமின்றி வளைந்து கொடுக்காமல் பணியாற்றப் போவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios