Asianet News TamilAsianet News Tamil

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் ! மோடி அதிரடி !!

நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

75 new medial colleges
Author
Delhi, First Published Aug 28, 2019, 10:03 PM IST

இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் வரும் 2021-22 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது என தெரிவித்தார். இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்..

மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். நிலக்கரி சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும். 

75 new medial colleges

உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

75 new medial colleges

சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.  நியூயார்க் நகரில் வரும் செப்.,23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைப்பார் எனவும் பிரகாஷ் ஜவடேகர்  கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios