Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரவை அதிரடியாக மாற்றி அமைக்கப்படுமா? 6 பேருக்கு அமைச்சர் பதவி !! எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம் !!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்ததும் அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 mla wil get new minister post
Author
Chennai, First Published Dec 9, 2019, 7:44 AM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்; தங்களூக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, எம்.எல்.ஏ.,க்கள் பலர் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அமைச்சரவை மாற்றம்  குறித்து எந்தத் கதவலும் வெளியாகிவில்லை. தற்போதுசெய்யப்படாததால், விரக்தி அடைந்தனர். இப்போது, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக, புதிய தகவல் வெளியாகி உள்ளது.

6 mla wil get new minister post

ஜெயலலிதா மறைவுக்கு பின்முதலமைச்சராக  இ.பி.எஸ்., பொறுப்பேற்ற போது, ஜெயலலிதா ., அமைச்சரவையில் இருந்தவர்களே தொடர்ந்தனர். செங்கோட்டையன் மட்டும், புதிய அமைச்சராக பொறுப்பேற்றார்.அணிகள் இணைந்த போது, ஓபிஎஸ்க்கு துணை முதலமைச்சர்  பதவி வழங்கப்பட்டது. அதேபோல், பாண்டியராஜனுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

6 mla wil get new minister post

அதன்பின், நீதிமன்ற உத்தரவு காரணமாக, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி, எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அவர் கவனித்து வந்த துறை, கூடுதல் பொறுப்பாக, அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை, அமைச்சர் பதவியில் இருந்து, முதலமைச்சர்  நீக்கினார்.

6 mla wil get new minister post

இதையடுத்து .நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், அமைச்சரவையை மாற்றி அமைக்க, எடப்பாடி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. சரியாக செயல்படாத, மூன்று அமைச்சர்களை மாற்றவும், அந்த துறைகளுக்கும், ஏற்கனவே காலியாக உள்ள துறைகளுக்கும் சேர்த்து, ஆறு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்  உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அமைச்சரவையை மாற்றி அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios