Asianet News TamilAsianet News Tamil

20 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா... அதிர்ச்சியில் காங்கிரஸ்... மகிழ்ச்சியில் பாஜக..!

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார்.

20 Madhya Pradesh ministers resign...kamal nath government crisis
Author
Madhya Pradesh, First Published Mar 10, 2020, 10:42 AM IST

20 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் மத்தியப்பிரதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கார்நாடக போலவே மத்திய பிரதேசத்திலும் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். 

20 Madhya Pradesh ministers resign...kamal nath government crisis

இந்நிலையில், மத்தியப் பிரதேச அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தனி விமானத்தில் மீண்டும் பெங்களூரூ சென்றுள்ளனர். இவர்கள் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் மத்திய பிரதேச அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டது. 

20 Madhya Pradesh ministers resign...kamal nath government crisis

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில முதல்வர் கமல்நாத் நேற்று சந்தித்து அவரச ஆலோசனை நடத்தினார்.
இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பின்னர் மாநிலம் மாநிலத்திற்கு திரும்பிய கமல்நாத் தனது இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணிக்கு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் 20 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கமல்நாத்தை அவர்கள் வலியுறுத்தி தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios