Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகவில் 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் விலக ரெடி... எடியூரப்பா அரசுக்கு எதிராக குண்டு போடும் குமாரசாமி!

 கர்நாடகாவில் பாஜகவிலிருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் விலக தயாராக உள்ளனர் என்று முன்னாள் குமாரசாமி அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்.

20 Bjp mla willing to out from the bjp party?
Author
Karnataka, First Published Jan 7, 2020, 10:23 PM IST

20 Bjp mla willing to out from the bjp party?

கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியிலிருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் விலகியதால், மெஜாரிட்டியை இழந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. தற்போது மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியில் இருந்துவருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.20 Bjp mla willing to out from the bjp party?
 “தற்போது எடியூரப்பா மிகவும் கஷ்டப்பட்டு 4-வது முறையாக கர்நாடக முதல்வர் ஆகியுள்ளார். அவர் முதல்வரானதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனக்கு இடையூறு செய்ததுபோல, எடியூரப்பா அரசுக்கு இடையூறு செய்ய நான் விரும்பவில்லை. எடியூரப்பாவுக்கு இடையூறு செய்வேன் என்று நான் எங்கும் சொல்லவில்லை. தற்போதுகூட பாஜகவிலிருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் வரை விலக தயாராக இருப்பதாக என்னிடம் தூது வந்தார்கள். பிறகு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

20 Bjp mla willing to out from the bjp party?
ஆனால், நான் ஏன் அதை செய்ய வேண்டும்?. எடியூரப்பா செய்தது போல் ஒரு அரசை கவிழ்க்க நான் முயற்சிக்க மாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் எனக்கு முக்கியம். ஆட்சி, அதிகாரம் என்பது யாருக்கும் நிரந்தரமல்ல. இதைப் புரிந்துகொண்டு எடியூரப்பா பணியாற்ற வேண்டும்.” என்று குமாரசாமி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios