Asianet News TamilAsianet News Tamil

மதமாவது ? மொழியாவது ? இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் !! அதிரடி ஆர்.எஸ்.எஸ். !!

மதம், மொழி எதுவாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள 130 கோடி பேரும் இந்துக்கள் தான் என்றும் இந்தியர் அனைவரையும் இந்துக்களாகவே தாம் கருதுவதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

130  crore people in India are hindus told Bharawath
Author
Hyderabad, First Published Dec 27, 2019, 7:29 PM IST

தெலுங்கானா மாநிலம் இப்ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு  பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் , . “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்று கூறினார்.

“ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

130  crore people in India are hindus told Bharawath

“பாரதத் தாய் இந்தியாவின் மகன் மகள் மகள் எந்த மொழியைப் பேசுகிறார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், எந்த விதமான வழிபாட்டைப் பின்பற்றுகிறார் என பார்ப்பது இல்லை. எவ்வாறாயினும் அவர் ஒரு இந்து என்று மட்டுமே பார்க்கிறாள்” எனவும்  மோகன் பகாவத் குறிப்பிட்டார்.

“இந்த உலகம் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை உற்று நோக்குகிறது. இதை இந்து சமூகம் மட்டுமே வழங்க முடியும்” என்று கூறிய  மோகன் பகவத், ‘போராட்டத்தின் மத்தியில், சமூகம் ஒன்றாக வாழ ஒரு தீர்வைக் கொண்டுவரும். அந்த தீர்வு நிச்சயமாக ஒரு இந்துத்துவா தீர்வாகவே  இருக்கும்’ என்று ரவீந்திரநாத் தாகூரே கூறியிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

130  crore people in India are hindus told Bharawath

“பன்முகத்தன்மையில் ஒற்றுமை இருக்கிறது என்று ஒருபிரபலமான பழமொழி உள்ளது.ஆனால் நம் நாடு ஒரு படி மேலே செல்கிறது. இங்கே நமக்கு பன்முகத்தன்மையில் ஒற்றுமை மட்டுமல்ல, ஒற்றுமையின் பன் முகத்தன்மையும் உள்ளது” என்றும் மோகடன பகாவத் அதிரடியாக பேசியுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios