ஊராட்சி சபை கூட்டத்தின்போது மக்களிடம் கை குலுக்குவதால் அதன் மூலம் கிருமிகள் வரவாமல் தடுக்க அவ்வப்போது கிருமிகளை அழிக்கும் சொல்யூஷனை கொண்டு ஸ்டாலின் தனது கையை துடைத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் கிராமம் கிராமமாக சென்று ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் காருக்குள் அமர்ந்து அவர் சொல்யூஷன் மூலம் தனது கைகளை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவர் மக்களிடம் கை கொடுத்தாலே கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் என்று அச்சப்பட்டு கை கழுவும் ஸ்டாலின், அடுத்து முதல்வரானால், மக்களை கை கழுவ மாட்டார் என்பது என்ன நிச்சயம் என சமூக வலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் பரவும் இந்த புகைப்படத்தால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த ஒருவர், "இந்தப்புகைப்படம் ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணத்தின்போது எடுக்கப்பட்டது. அதிகளவு சுற்றுப்பயணம் செய்பவருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எங்கள் தலைவர் செய்வதில் தவறு ஏதும் இல்லை’ என்கிறார். இந்தப்புகைப்படத்தால் கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியினருக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.