இரவு நேரங்கள் மட்டுமல்லாது "எய்டஸ்" போன்ற கொசுக்கள் பகல் நேரங்களிலும் மனிதனைக் கடித்து பல்வேறு நோய்களை உண்டாக்குவதில் சிறந்தவை. கொசுக்கைகளை அழிக்க இதுவரை எந்தவித மருந்தோ, மேட், கொசுவர்த்தியோ கண்டுபிடிக்கப்படவில்லை. 

விளம்பரத்தில் கொசுக்களை அழிக்கும் என்றுதானே வருகிறது? என்று நினைக்கிறீர்களா? உங்கள் நினைப்பு சரிதான். ஆனால், மேட், லிக்யூட், கொசுவர்த்தி என எதுவுமே கொசுக்களை அழிக்காது. இதிலும் கார்ப்பரேட் சதி இருக்கு. 

mosquitoes க்கான பட முடிவு

எப்படின்னு கேட்குறீங்களா? கொசுவை அழிக்கவே விதவிதமான பொருட்களை தயாரித்து விற்று இலாபம் பார்க்கும்போது, கொசுவால் உண்டாகும்  நோய்களை விரட்டுகிறேன் என்று எவ்வளவு பொருட்கள் தயாரிக்கலாம். எவ்வளவு லாபம் பார்க்கலாம். 

அதுமட்டுமா? ஓடோமாஸ் போட்டுக்கோங்க இல்லென்னா வீட்டுக்குள்ளேயே விளையாடுங்க! கருப்பு ஹிட் கொசுவுக்கு! இப்படியெல்லாம் விளம்பரம் செய்வது சேவைக்கா? இல்லை பணத்திற்காக தானே! கொசு அழிந்தால் எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் பணம் பார்க்க முடியும்.

எனவே, கொசுவை அழிக்க அல்ல விரட்ட மட்டுமே முடியும். அடுத்தமுறை விளம்பரங்களை பார்க்கும்போது கவனிச்சு பாருங்க! அவனும் இதே தான் சொல்லுவான்.

mosquitoes க்கான பட முடிவு

என்னென்ன டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் மட்டுமல்ல யானைக் கால் வியாதி, வெஸ்ட் நைல் வைரஸ், எல்லோ ஃபீவர் (மஞ்சள் காமலை அல்ல), ரிஃப்ட் வேலி ஃபீவர், முரே வேலி, சிக்குன் குனியா, என்செப் ஆல்டிஸ், வெஸ்டர்ன் இக்வைன் என்செப் ஆல்டிஸ், ரோஸ் ரிவர் ஃபீவர் போன்ற நோய்களும் பரவுகின்றன. 

சரி! கொசுக்களை விரட்ட இந்த மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இதனால் கொசுக்கள் விரப்படுவது மட்டுமல்ல இன்னபிறகு மருத்துவ நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.  முதலில் கொசுக்களை விரட்டும் செடிகளை பற்றி பார்க்கலாம்.

mosquitoes க்கான பட முடிவு

சிட்ரெநெல்லா, எஜ்ரேடம், வேப்பிலை, ரோஸ் மேரி, யூகலிப்ட்ஸ், நொச்சியிலை, மேரிகோல்ட், சாமந்தி பூ, புதினாச் செடி, பூண்டுச் செடி போன்ற மூலிகை செடிகளில் எதாவது ஒன்றை வீட்டில் வளர்த்தால் கூட கொசுக்கள் உங்கள் பக்கம் தலைவைத்து படுக்காது.

இப்போ இந்த செடிகளால் கிடைக்கும் போனஸ் என்ன என்று பார்க்கலாம்? 

1.. வேப்பிலை

வேம்பை தின்றால் குடல் புழுக்கள் சாகும், வாயு பிரச்சனை தீரும், வீக்கம், கட்டிகள் கரையும்.

2.. நொச்சியிலை

உடல் சோம்பலை போக்கும், காய்ச்சல் தீர்க்கும், ஜலதோஷம் குணமாகும், மாதவிலக்கைத் தூண்டும்.

தொடர்புடைய படம்

3.. சாமந்தி பூ

உடலில் கொழுப்பு குறையும், இரத்த அழுத்தம் குறையும், கணையம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியம் பலனடையும்.

4.. ரோஸ் மேரி

சிறுநீர் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இது தீர்க்கும். கண்களுக்கு குளிர்ச்சியூட்டும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது.

5.. சிட்ரெநெல்லா

கொசுக்கள் மட்டுமல்லாது பூச்சிகளையும் வீட்டில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

different types of mosquitoes க்கான பட முடிவு

6.. ஏஜ்ரேடம்
பார்க்க அழகாக இருக்கும் இந்த செடி வீட்டின் அழைகைக் கூட்டும். இதுவும் கொசுக்கள்  மற்றும் இன்னும் பிற பூச்சிகளையும்  விரட்டும் தன்மை கொண்டது.

7.. யூகலிப்டஸ்

உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும். மார்புச் சளி, கோழை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும். வயிற்றுப் போக்கை சரியாக்கும்.

8.. மேரி கோல்ட்
சருமங்களில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும், முகப்பருக்களை குணமாக்கும். பளப்பளப்பான சருமம் தரும்.

different types of mosquitoes க்கான பட முடிவு

9.. புதினாச் செடி
எப்படிப்பட்ட உணவாகை இருந்தாலும் எளிதில் ஜீரணமாக்கும். இரத்தத்தை சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

10.. பூண்டு

இரத்த கொதிப்பை குறைக்கும். இதயத்தை பாதுகாக்கும். சுவாச பிரச்சனைகளை தீர்க்கும்.

இப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள செடிகளை வளர்த்து உங்கள் உடலையும் பாதுகாக்கலாம். இந்த செடிகள் மூலம் கொசுக்களை விரட்டி மலேரியா, டெங்கு போன்ற பெரிய வியாதிகளையும் தவிர்க்கலாம்.