உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணமே ஆணும் பெண்ணும் இணைந்து புதிய உயிரை உருவாக்குவதால் தான். அந்த வகையில் உடலுறவு என்பது ஆண் பெண் என இருபாலருக்குமே இயல்பான ஒன்று தான். வயது வந்த பிறகு ஆண் மற்றும் பெண் என இருபாலருக்குமே எதிர்பாலினத்தவர் மீது அவர்கள் அறியாமலேயே ஈர்ப்பு ஏற்படும். இந்த ஈர்ப்பின் விளைவாகவே உடலுறவு ஏற்படுகிறது.

பொதுவாக செக்ஸ் என்றால் ஆண் மற்றும் பெண் என இருபாலருமே அதிக ஆர்வத்துடன் இருப்பது உண்டு. ஆண்டு சில சமயங்களில் செக்ஸ் என்றால் மிக கடுமையாக பெண்கள் வெறுப்பார்கள். அதிலும் திருமணத்திற்கு பிறகு உடனடியாக செக்ஸ் என்றால் சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்?

1) பெண்கள் எதிர்பார்ப்பது காதல்  ஒரு ஆணுடன் பழகிவிட்டதாலயே அந்த பெண் அவருடன் செக்சுக்கு தயார் என்று அர்த்தம் இல்லை. மேலும் அந்த பெண் அந்த ஆணுடன் செக்சுக்கு தயாராக இல்லை என்றும் அர்த்தம் இல்லை. அதே சமயம் அந்த பெண் முதலில் அந்த ஆணிடம் இருந்து காதலை எதிர்பார்க்கலாம். தான் எதிர்பார்க்கும் காதல் கிடைத்துவிட்டால் அந்த பெண் அவருடன் மிகவும் ஆர்வத்துடன் செக்சுக்கு தயாராகிவிடுர். இங்கு காதல் என்பது அன்பு, அரவணைப்பு மற்றும் பொறுமையை குறிக்கும்.

2) நேரம் எடுத்துக் கொள்ளலாம் ஒரு ஆணுடன் பழகிய உடனுடன் அவருடன் படுக்கைக்கு வருவதற்கு சில பெண்கள் தயங்குவார்கள். செக்ஸ் குறித்த புரிதல் அவர்களுக்கு அவ்வளவாக இல்லாமல் இருக்கலாம். மேலும் சிறிது தயக்கமும் இருக்கலாம். எனவே சிறிது காலம் பொறுத்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பெண்கள் நினைக்கலாம். இதனை ஆண்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.

3) முன்விளையாட்டு  சில பெண்கள் கிளைமாக்சை விரும்பமாட்டார்கள். மாறாக அவர்களுக்கு முன்விளையாட்டு மட்டுமே அதிகம் பிடித்திருக்கும். உதாரணமாக உதட்டோடு உதடு பதித்தல், மார்பகங்களை சுவைத்தல், இடுப்புகளுடன் விளையாடுதல் போன்றவை தான் சில பெண்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கும். கிளைமாக்ஸ் என்று வந்தால் அவர்கள் அதனை தேவையற்றது என்று கருதலாம். எனவே இது போன்ற பெண்களிடம் ஆண்கள் பொறுமை காப்பது அவசியம்.

4) கடந்த கால தவறு கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான செக்ஸ் அனுபவம் சில பெண்களுக்கு தற்போது வரை நினைவில் இருக்கும். அதாவது சிறுமியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டது, அல்லது பழைய காதலனுடனான மோசமான அனுபவம் போன்றவை பெண்களை செக்சை முற்றிலுமாக வெறுக்க வைத்திருக்கும். இது போன்ற பெண்கள் கவுன்சிலிங் செல்ல வேண்டியது அவசியம்.

5) செக்ஸ் பற்றிய தவறான புரிதல்  செக்ஸ் குறித்து எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதும் பெண்கள் அதனை வெறுப்பதற்கு காரணமாக இருக்கும். உதாரணமாக முதல் முறை செக்சின் போது உறுப்பில் இருந்து ரத்தம் வரும், வலி ஏற்படும் என்று காலம் காலமாக கூறப்படும் சில தகவல்கள் அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கும். இதன் காரணமாகவே அவர்கள் செக்ஸ் என்றால் தெறித்து ஓடுவார்கள். இந்த மாதிரியான பெண்களுக்கு செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.  இது போன்று சின்ன சின்ன காரணங்களால் மட்டுமே பெண்கள் செக்சை வெறுக்க நேரிடுகிறது. இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டால் அவர்களுக்கும் இயல்பாக செக்ஸ் வாழ்க்கையில் இணைந்துவிடுவார்கள்.