வட இந்திய பெண்களுக்கு தென்னிந்திய ஆண்களை தான் மிகவும் பிடிக்குமாம், அதற்கான அடிப்படைகள் என்ன கொஞ்சம் பார்க்கலாமா?

சாப்பாடு!
வட இந்தியாவில் இருந்து தெனிந்தியா வரும் பலருக்கும் நமது பல வகை தோசைகள், மல்லிகை பூ இட்லி, அதை தொட்டு சாப்பிட பலவகை சட்டினி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தும் பிடிக்கிறதாம்.  இவை வீட்டில் சமைத்தவையாக இருந்தால் மேலும் கொண்டாட்டம்தான். விருந்தோம்பலுக்கு நாம்தான் சிறந்தவர்களாயிற்றே. வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் மீது கூடுதல் பாசமாக பழக இது முக்கிய காரணம்.

பேச்சுவழக்கு  
நண்பனை மட்டுமே, மாமா, மச்சான், நண்பா, தோழரே, மச்சி, சித்தப்பு, சகல என்று வாயில் வரும் சொந்தங்களின் பெயர்களை எல்லாம் வைத்து அழைக்கும் வழக்கம் வட இந்தியப் பெண்களை கவர்ந்திருக்கிறது டா போட்டு பேசுவது மிகவும் பிடித்திருக்கிறதாம்

நாகரீகம்
தென்னிந்திய ஆண்கள் தன் தோழிகளை உடுத்தும் உடையை வைத்து எடை போடுவது இல்லை என்றும், கலாச்சார வேறுபாடுகளை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதாகவும் வட இந்தியப் பெண்கள் கூறுகின்றனர். 


  
குணாதிசயங்கள்
மிக எளிதாக நெருக்கமாக பழக துவங்கிவிடுவார்கள் என்றும் குறுகிய காலத்தில், இவ்வளவு பாசமாக ஒருவரால் பழக முடியும் என்பதும் தென்னிந்திய மக்களிடம் காணப்படும் ஆச்சரியம் என்கிறார்கள் வட இந்தியப் பெண்கள். மேலும் சிக்கனமாக செலவு செய்ய கற்றுக் கொடுப்பதும் தென்னிந்தியர்களின் மற்றொரு சிறப்பம்சமாம்

ஒழுக்கம்
தான் கல்லூரியில் கட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தென்னிந்திய தோழி ஒருத்தி நல் ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தாகவும் வட இந்தியப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். கல்லூரிக்கு வருவது படிப்பதற்கு என்றும் லூட்டி அடிக்க அல்ல என்றும் அவள் கூறிய அக்கறையான அறிவுரைகளுக்கு பிறகு, வகுப்பு நேரத்தில் கட் அடிப்பதை நிறுத்திவிட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்

அச்சம் தவிர்!
மும்பை, டெல்லி வரை தனியாக வந்து படித்துவிட்டுச் செல்லும் அளவுக்கு தென்னிந்தியப் பெற்றோர் குழந்தைகளை தைரியமாக வளர்ப்பதாகவும், ஆனால் வட இந்தியாவில் ஒரு எல்லையும், அச்சமும் உண்டு என்று கூறும் வட இந்தியப் பெண்கள் சுதந்திரத் தன்மையையும் அச்சமின்றி வாழவும் கற்றுக் கொடுக்கும் அப்பா, அம்மாக்களுக்கு நன்றி கூற வேண்டும் என்கின்றனர்.

  விழா!
"தென்னிந்தியாவில் விழாக்கள் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் என்கின்றனர். உடைகள் முதல் பண்டிகைப் பலகாரங்கள் பழ வகைகள் வரை அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று கூறும் வட இந்தியப் பெண்கல் தென்னிந்தியத் தோழர்கள் வீட்டில் பண்டிகை கொண்டாடிய நாட்களை மறக்க முடியாது என்கின்றனர்.