தாயை விட்டு பிரிந்து வாழ இதுதான் காரணம்..! 

தன் தாயை விட்டு ஏன் பிரிந்து வாழ்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக அவருடைய வாழ்க்கையை பற்றி நடிகர் அக்ஷய் குமார் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய மோடி, "நான் இளம் வயதிலேயே என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து விதமான சொந்த பந்தங்கள் மற்றும் பற்றில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். காரணம் அனைத்து பந்தங்களுமே மாயை என்பது தான் உண்மை என்பதை புரிந்து கொண்டேன். 

நான் என் வீட்டை விட்டு வெளியேறிய போது, மிகவும் சிரமம் அடைந்தேன். பல துன்புறுத்தலுக்கு ஆளானேன். என் அம்மா எப்போதும் ஒன்றை சொல்லுவார். நீ வீட்டிற்காக என்ன செய்யப் போகிறாய் ?உன்னிடம் நான் என்ன பேசுவது.. என கேட்பார். அதற்கு காரணம் நான் தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவதே. 

ஆனால் அவருக்கு என் மீது அதிக பாசம். எனக்கும் அவர் மீது அதிக பாசமும் அன்பும் உள்ளது. நான் அவரை காண  செல்லும் போதெல்லாம் 
அப்போதெல்லாம் எனக்கு ஒரு சிறிய தொகையை தருவார். ஆனால் என்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார். இதுவரை என் குடும்பத்திற்காக அரசு பணத்தை இதுவரை செலவிட்டதில்லை. நாடு தான் எனது குடும்பம். இதுதான் என் வாழ்க்கை" என அவரது உருக்கமான உரையை முடித்துக் கொண்டுள்ளார் மோடி.