ஆரத்தி எடுக்கும் முறையை தற்போது நாம் இதை வெறுமனே திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால் இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறை அல்ல. கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா?

இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது. முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம். திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்குத்தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம்.

நம் முன்னோர்கள் ஏன் இந்த மாதிரியான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தார்கள்? ஆரத்தி எடுக்கும் சடங்கின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் அதிகம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில், தண்ணீரில் மஞ்சள் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். அதன் நடுவில் தீச்சுடர் வைத்து, 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததுதான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் இருக்கும், இந்த கிருமி நாசினி நீரில் சூடம் ஏற்றி உடலை சுற்றுவதால் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். வாசலில் ஆரத்தி எடுப்பது ஏன் உடல் மேல் கிருமிகள் இருக்கும் நிலையில் வீட்டுக்குள் வரும் போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும்.

இது அவர்களுக்கு சிறு சிறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள். நமது முன்னோர்கள் எதையும் வெறுமனே செய்துவைக்கவில்லை. அவர்களது செயல்களில் மருத்துவம் அறிவியலும் புதைந்து இருக்கிறது என்பதற்கு ஆரத்தி எடுக்கும் முறை மற்றொரு சான்றாக விளங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.