டேட்டிங் மேற்கத்திய கலாச்சாரம் என மேம்போக்காக இருந்துவிட முடியாது இந்திய  முன்னணி நகரங்களில் இளம் பெண்கள் ஆண்களிடையே சர்வ சாதாரணமாக ஏற்கத்தக்க கலாச்சாரமாகிவருகிறது.

கல்லூரி  மாணவியர் கருக்கலைப்பு என்ற நிலைக்கு செல்லுவதும் நிகழ்கிறது. காலமாற்றமும், இளந்தலைமுறையின் மனோபாவமும் இதனை கலாச்சாரச் சீரழிவாக அன்றி கலாச்சாரத்தில் முன்னேறிய நிலையாக கருதும் அவலமும் காணப்படுகிறது. 

உறவுகள் செயலிகளைப் போல தேவைப்பட்டால் இன்ஸ்டால், தேவை முடிந்தால் அன் இன்ஸ்டால் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. 

இந்நிலையில் டேட்டிங் என்ற கலாச்சாரத்துக்கு வித்திட்ட பெண்கள் திருமணமான ஆண்களுடன் டேட்டிங்குக்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள். 

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் வித்தியாசமானவை

5 வருட காதல் வாழ்க்கை முறிவில் முடிந்த நிலையில் திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்வதாகவும், இதனால் தனக்கு வாழ்க்கையில் மீண்டும் ஏமாற்றம் தவிர்க்கப்படும் என்று கூறுகிறார் ஒரு பெண். திருமணமான ஆண்களுடன் டேட்டிங் குறித்து யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலை தனக்கில்லை என்று கூறும் ஒரு பெண், திருமணமான ஆண்கள் எப்போதுமே தொல்லை செய்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காமல் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிறார்.

திருமணமான ஆண் என்னை திருமணம் செய்து கொள்வாயா என கேட்க முடியாது என்கிறார் மற்றொரு பெண். திருமணமான ஆண்வெளிப்படையாக இருப்பதாகக் கூறுகிறார் மற்றொரு பெண். தனது நிறைகுறைகள் குறித்த கவலை இல்லை என்றும், திருமண்மான ஆண்கள் சிறப்பான செயல்கள் செய்தால் பாராட்டி ஊக்கம் அளிப்பதாகவும் கூறுகிறார். 

திருமணமான் ஆண்களுடன் டேட்டிங் பிரச்சினை இருப்பதாகக் கூறும் ஒரு பெண் காதலர் தினத்தை தனியாகத் தான் கொண்டாட வேண்டும் என்கிறார்.திருமணமான ஆணால் பாதிப்போ, தொல்லையோ இல்லை என்று கூறும் ஒரு பெண் தேவையான அக்கரையும், கவன ஈர்ப்பும் கிடைப்பதாகக் கூறுகிறார்

திருமணமான ஆண்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிய போவதில்லை என்பதால் தன்னை விட்டு எப்படியும் பிரிந்து சென்றுவிடுவார் என்பதை எதிர்பார்த்தே பழகுவதால் ஏமாற்றம் இருப்பதில்லை என்றும், அவர்களை பின் தொடர்ந்து கெஞ்சவோ, பிரிவு குறித்து வருந்தவோ அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.