ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? 

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரீச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இதனை நாள்தோறும் குறைவான அளவில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் வலிமை பெறும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.இதனை எப்படி மிக்ஸ் செய்து சாப்பிடுவது என்பதை பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் பேரிச்சம்பழம் அரைக்கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சரிசமமாக தேனை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குங்குமப்பூவை சிறிதளவு தூவி விடுங்கள். இதனை காலை நேரத்தில் வெயிலில் அரைமணி நேரம் வைத்து பின்னர் அதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தினமும் இரவு உறங்க செல்லும் முன் இரண்டு பேரீச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு அதன் பின்னர் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு உறங்க வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். 

அதேபோன்று பேரீச்சம்பழம் தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு அத்திப்பழம் தேன் கலவையை எடுத்துக்கொள்ளலாம். அதாவது தேன் அத்திப்பழம் மற்றும் குங்குமப்பூ இவை மூன்றையும் இதே போன்று காலை நேரத்தில் இளம் வெயிலில் ஒரு அரை மணி நேரம் வைத்து விட்டு பின்னர் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனை தேன் கலந்த கலவை சாப்பிட்ட பிறகு அத்திப்பழம் தேன் கலவையை சாப்பிட்டு, பிறகு ஒரு டம்ளர் பால் குடித்தபின் உறங்கினால் நல்ல உறக்கம் வரும். உடலில் ஆரோக்கியம் பெருகும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ஒரு மாத காலத்திலேயே ரத்தசோகை இருப்பவர்கள் நன்கு நலம் பெறுவர். ரத்தம் அதிகரிக்கும். அதேபோன்று ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். காரணம் பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.