Asianet News TamilAsianet News Tamil

உடலுறவின் போது பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது...

 உடலுறவின் போது ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் ஆண்களை பெண்கள் தன் உள்ளங்கைகளில் வைத்து தாங்குவார்கள்.

What women expect during Romance intercourse
Author
Chennai, First Published Sep 11, 2018, 11:34 AM IST

உடலுறவின் போது ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் ஆண்களை பெண்கள் தன் உள்ளங்கைகளில் வைத்து தாங்குவார்கள். அதிலும் உடலுறவில் அதிக ஈடுபாடு உள்ள பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்களின் எதிர்பார்ப்பு கன்னா பின்னாவென்று இருக்கும். 

இந்த எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்ய ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் உடலுறவின் போது பல வகைகளில் பெண்களின் எதிர்பார்ப்பு இருக்கும். அவற்றின் பிரதானமான எதிர்பார்ப்பு, உடலுறவின் போது அவர்களின் காதுகளில் கேட்கும் சப்தம். ஆணுடன் பெண் ஒருவர் உடலுறவில் இருக்கும் போது என்ன மாதிரியான சப்தத்தை கேட்க விரும்புகிறார் என்ற ஆன்லைன் இணையதளம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதிலும் உடலுறவின் போது தாங்கள் எதிர்பார்க்கும் சப்தம் என்ன என்று அவர்கள் மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

1. முனகல்; உடலுறவின் போது பெரும்பாலான பெண்கள் கேட்க விரும்புவது தங்கள் ஆண் பார்ட்னரின் முனகல் சப்தத்தை தான். அதிலும் உடலுறவை என்ஜாய் செய்து கொண்டே தங்கள் ஆண் பார்ட்னர்கள் முனகும் போது தங்களுக்கான என்ஜாய்மென்ட் அதிகமாகிறது என்கின்றனர் பெண்கள். மேலும் முனகல் சப்தமானது மெதுவாக இல்லாமல் அதிகமாகும் போது தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.


2.பெயரை உச்சரிக்க வேண்டும்; உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எங்கள் பெயரை ஆண்கள் உச்சரிக்கும் போது தங்களுக்கு ஆர்வம் அதிகம் ஆவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர். அதிலும் எங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே உடலுறவில் ஆண்கள் தீவிரம் காட்டும் போது மகிழ்ச்சி இரண்டு மடங்கு ஆவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

3. ஆபாசமான பேச்சுகள்; உடலுறவின் போது ஆண்கள் ஆபாசமாக பேச வேண்டும் என்று பெண்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் உடல் உறுப்புகளை கொச்சையான வார்த்தைகளை கூறி உச்சரிக்கும் போது உடலுறவின் மீது அதீத ஈர்ப்பு ஈடுபடுவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர். அதிலும் பொதுவில் அசிங்கமான வார்த்தைகள் என்று கூறப்படும் வார்த்தைகளை ஆண்கள் அந்தரங்கமாக இருக்கும் போது பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் பெண்கள்.

4.மூச்சுவிடும் சப்தம்; உடலுறவின் போது ஆண்கள் தங்கள் மூச்சை இழுத்துவிடும் சப்தம் தங்களுக்குள் கிளர்ச்சியை அதிகமாக்குவதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்கள் தங்கள் கழுத்திற்கு அருகாமையில் வந்து மூச்சுவிடும் போது, உடலுறவில் தீவிரமாக இறங்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


5.பெயரை மாற்றி உச்சரித்தல்; உடலுறவின் போது பெண்கள் கேட்கவே விரும்பாத ஒரு வார்த்தை வேறு பெண்ணின் பெயர். உடலுறவில் இருக்கும் போது ஆண் தனது முன்னாள் காதலி அல்லது முன்னாள் மனைவி அல்லது வேறு ஏதேனும் பெண்ணின் பெயரை உச்சரித்துவிட்டால் அதுவரை வந்த மூட் அப்படியே போய்விடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் தப்பித்தவறி தங்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணின் பெயரை அந்த நேரத்தில் உச்சரித்துவிடாதீர்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios