பசி, தாகம், தூக்கம் போல உடலுறவும் இயற்கையானதுதான் என்றபோதும் அதனை சிறப்பாக செயல்படுத்த சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதும் அவசியமே உடலுறவு ஒருவர் மட்டுமே சார்ந்தது அல்ல என்ற நிலையில் இருவரின் மனம் ஒப்பிய ஒத்துழைப்பும் அவசியம். பலர் தங்கள் துணைக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கெஞ்சிக் கூத்தாடியாவது உடலுறவுக்கு இணங்கச் செய்ய முயற்சிப்பார்கள். 

நிர்ப்பந்தத்துக்கு பணிந்தோ மனம் இரங்கியோ ஒப்புக்கொண்டாலும் ஈடுபாடு இல்லாத உடலுறவில் நிறைவோ திருப்தியோ இருக்க வாய்ப்பில்லை உடலுறவில் நிறைவு வேண்டுமா? - செய்ய வேண்டியது எது? தகாதது எது என சில இலக்கணங்கள் உள்ளன. இவை பெரிய கம்ப சூத்திரமும் அல்ல காம சூத்திரமும் அல்ல! இயல்பான நடைமுறையில் புரிந்துகொள்ளக்கூடியவைதான்.

நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

பல பெண்களுக்கு தங்கள் தோற்றம் குறித்த பதற்றம் இருப்பதுண்டு. நாளாக நாளாக தன்மீது தன்னவனுக்கு ஈர்ப்பு குறைவதாக பெண் உணர்ந்தால், பழக்கவழக்கங்களில் பாதிப்புகள் ஏற்படும், இருட்டில் ஆடைகளைக் களைதல் போன்ற பெண்ணின் பழக்கங்களின் மூலம் இந்தப் பதற்றத்தை அறிந்துகொள்ள அக்கறையுள்ள அன்பான ஆண்களால் முடியும். சுமாராக உள்ள பெண்ணை பேரழகி என வர்ணிக்க அவசியமும் இல்லை. அவளது அழகை குறைகூறவும் வேண்டியதில்லை. தன்னவளிடம் எது அதிக ஈர்ப்போ அதைப் பாராட்டினாலே போதும். பெண்களைப் பொறுத்த வரை செக்ஸ் வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் ஆண்கள் அதனை அழுத்தம் நிறைந்த அம்சங்களில் ஒன்றாகக் கருதி அணுகுகின்றனர்.

ஈடுபாட்டை குறைத்துவிடும்

படுக்கையில் பெண் எப்படி ஈடு கொடுக்கிறாள் என்பது, தன்னவரின் அணுகுமுறையைப் பொறுத்து அமைகிறது. கவனிக்காமல் இருத்தல், கடுமையாக பேசுதல், முரட்டுத்தனம் காயப்படுத்தக்கூடிய வார்த்தைகள், விமர்சனங்கள் உள்ளிட்டவை பெண்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் குறைத்துவிடும், பெண்ணுக்கு உச்சக்கட்ட பாலுணர்வு சுகத்தை அளிப்பதே ஆண்மகனுக்கு அடையாளம் என கருதப்படுகிறது, அத்தகைய தருணங்கள் சிறப்பானதுதான் என்றபோதும். அது ஒவ்வொரு முறையும் ஏற்படவேண்டும் என்பது அவசியமல்ல. எனவே பரவசநிலையை அடையமுடியாத போது அது தொடர்பான மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியமில்லை சில நேரங்களில் பரவச நிலையை விட உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளை பெண்கள் அதிகம் விரும்புவதும் உண்டு.

சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

எனவே உடலுறவு என்பது தீவிரமான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிரிப்பதும் காதலுடன் கூடிய குரும்பும், குதூகலமுமே காமத்தில் இனிமையைக் கொண்டுவந்துவிடும். விளையாட்டுத்தனமும், அமைதியான மனமும் நெருக்கமான தருணங்களை மகிழ்வானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும்போது சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற அழுத்தம் இருவருக்குமே இருப்பதில்லை

பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தையும், அரவணைப்பையும் பெண்கள் விரும்புகின்றனர். காதல், அரவணைத்தல், கைகளைப் பற்றிக் கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவற்றை உடலுறவு சாராத நேரங்களில் தன்னவர் செய்வதில்லை என்பது  பல பெண்களுக்கு பெரும் குறையாகவே உள்ளது. ஸ்பரிசத்தின் ஆனந்தத்தைத் தனது துணையை பெண் உணரச் செய்ய வேண்டும். அமைதியளிக்கும் மசாஜ், முகம் மற்றும் தலை முடியை மென்மையாக வருடுதல் ஆகியவை மூலம் பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தின் ஆனந்தத்தை உணரச் செய்யும்.

உடலுறவுக்கு பின்

உடலுறவுக்கு பின் அன்பான கவனிப்பு முக்கியம். உடலுறவுக்கு பின் ஆண்கள் உடனே தூங்கி விடுவதாகச் சொல்லும் பெண்களும் உண்டு. உடலுறவின்போது ஆணின் எண்டோர்பின்களின் அளவு உச்சத்தில் இருக்கும். விந்து வெளியேறிய உடனேயே, விறைப்பும், அனைத்து அமைப்புகளின் வீரியமும் குறையத் தொடங்கி விடும். பெண்களுக்கு இந்த செயல்பாடு மெதுவாக நடைபெறும். எனினும் தன்னவர் உடனே உறங்கக்கூடாது என விரும்புபவர்கள் அவரை தங்கள் கைகளில் சில நிமிடங்கள் தூங்கவிட்டு பின்னர் மெதுவாக எழுப்பலாம்.