திருமணம் முடிந்த அடுத்த மாதமே மணப்பெண் கருத்தரிக்க வேண்டு என்ற சமூக அழுத்தம் உள்ள நிலையில் முதலிரவிலேயே சாதித்துவிடும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் நீண்ட திருமணச் சடங்குகளின் சோர்வுக்கிடையே அதை சாதிப்பது என்பது பகீரதப் பிரயத்தனம் என்பதெ உண்மை அந்த அழுத்தம் தேவையா என்ன? முதலிரவன்று மிகவும் ரிலாக்சாகி கவனத்தை வேறு பக்கம் திருப்பி சாதித்தவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகின்றனர். முதலிரவு என்றாலே செக்ஸ் தான் என்ற எழுதாத விதியை உடைத்ததாகக் கூறுகின்றனர் சில பெண்கள். 

தங்கள் திருமணம் மாதக்கணக்கில் ஏற்பாடுகள் நடந்து நடைபெற்றதாகக் கூறும் ஒரு ஜோடி உடல் முழுவதும் சோர்வு மட்டுமே நிறைந்திருந்த நிலையில் முதலிரவில் ஆங்கில சீரியல் பார்த்து சிரித்து மகிழ்ந்ததாகக் கூறுகின்றனர். 

திருமணங்களில் வாழ்த்த வருபவர்களை விட பந்தி, உணவு உள்ளிட்டவற்றை விமர்சிக்கவென்றே வருபவர்கள் உண்டு. தங்கள் திருமணத்தின் போது அவ்வாறு வந்தவர்களை கிண்டல் செய்து முதலிரவைக் கழித்ததாகவும் எப்போது துங்கினோம் என்றே தெரியாது என்றும் கூறுகின்றனர் மற்றொரு ஜோடி.

திருமணம், ரிசப்ஷன். எல்லா வேலையும் முடித்து மண்டபத்தில் வீடு வந்த போது நள்ளிரவு 1 மணி மேக்கப்பைக் கலைக்கவும், திருமண மண்டபத்தில் நடந்தவற்றை பேசித் தீர்க்கவுமே நேரம் சரியாக இருந்த நிலையில் விடியலுக்கு சற்று முன்பு அதிகபட்சமாக கட்டியணைத்துக்கொள்ள மட்டுமெ நேரம் இருந்ததாகக் கூறுகிறது இன்னொரு ஜோடி.

முதலிரவு என்பது தங்களுக்கு ஒரு அசவுகரியமான செயலாக இருந்ததாகக் கூறுகிறார் ஒரு பெண். முதலில் ஏதுவான ஒரு சூழலை உருவாக்கும் வகையில் தானும் தன் கணவரும் ஒரு மணி நேரம் சீட்டுக் கட்டு மற்றும் மொபைல் கேம்களை விளையாடியதாகவும், அதில் சோர்வடைந்த பின் செக்சில் ஈடுபட்டதாகவும் கூறுகிறார்.

ஆறு ஆண்டுகள் காதலித்த ஜோடி திருமணத்தன்று சடங்குகளால் சோர்ந்து போன நிலையில் மனைவியின் கோரிக்கையின் படி கணவர் மனைவிக்கு மசாஜ் செய்து விட்டிருக்கிறார். அதில் தான் உறங்கிவிட்டதாகக் கூறுகிறார் பெண்.

கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறந்த ஜோடி - ஹனிமூன் ட்ரிப் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த ஓட்டல் நிர்வாகம் - குளியலறையில் பாத்டப் முழுக்க ரோஜா இதழ்கள், நறுமணம் பொங்கும் மெழுகுவர்த்திகள் என காதல் சூழலை ஏற்படுத்தி வைத்திருந்ததால் தங்கள் முதலிரவு செக்ஸ் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறுகிறது இந்த ஜோடி