Asianet News TamilAsianet News Tamil

இனி வீட்டில் உருவாகும் கழிவுகளை ஆன்லைன் மூலம் விற்கலாம்..!

சென்னையை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் குப்பைகளை மாநகரில் சுமார் 200 இடங்களில் வைத்து அதனை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

we can sale home waste producths through online
Author
Chennai, First Published Dec 13, 2019, 7:37 PM IST

இனி வீட்டில் உருவாகும் கழிவுகளை ஆன்லைன் மூலம் விற்கலாம்..! 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அதாவது எந்தப் பொருளை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம் என்பது தான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஒரு சிலவற்றை அவ்வாறு செய்ய முடியாது.

இருந்தபோதிலும், அடுத்த கட்ட வளர்ச்சியாக தற்போது வீட்டில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகளை விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

we can sale home waste producths through online

சென்னையை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் குப்பைகளை மாநகரில் சுமார் 200 இடங்களில் வைத்து அதனை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நம் வீட்டில் வைத்து உள்ள தேவையில்லாத குப்பைகள், உபயோகப்பொருட்கள் மற்ற கழிவு பொருட்கள் என அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக www.madras waste exchange.com என்ற இணையதளம் மற்றும் madras waste exchange என்ற செயலியும்  உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

we can sale home waste producths through online

இதனை இன்று தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். இதனை வீட்டு உரிமையாளர்கள் மற்றும்  நுகர்வோரும் இந்த இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மக்கள் இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக நம் வீட்டில் தேவை இல்லாத பொருட்கள் இருக்கவே இருக்காது. வீடும் தூய்மையாக இருக்கும். நாடும் தூய்மையாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios