நல்ல சாப்பாட்டைகண்ணுல பார்த்தே ரொம்ப நாள் ஆகுது.. காவலர்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்திய விஜய் ரசிகர்கள்! 

21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ஊழியர்களும் காவல்துறையினரும் இராணுவத்தினரும் மற்ற சேவையில் இருப்பவர்களும் மக்களுக்காக இரவும் பகலும் வேலை செய்து வருகின்றன.

இந்த ஒரு நிலையில், அவ்வாறு இரவும் பகலும் மக்களுக்காக தொடர்ந்து வேலை செய்து வரும் காவலர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்குமா? என சொல்லமுடியாது. கிடைத்ததை சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்படும். விரும்பிய உணவையும் சாப்பிட முடியாத ஒரு சூழல் ஏற்படும். இந்த ஒரு நிலையில் புதுக்கோட்டை விஜய் ரசிகர்கள் காவலர்களுக்கு உதவ ஒரு வித்தியாசமான முறையை முயற்சி செய்து உள்ளனர்.

அதாவது ஊரடங்கு உத்தரவு காலங்களில் உணவகங்கள் மூடியிருக்கும். விரும்பிய உணவை கூட சாப்பிட முடியாது. வேலையில் இருப்பவர்கள் வீட்டில் இருந்து தூரமாக சென்று வரக்கூடியவர்கள். எனவே உணவு வேளையின் போது வீட்டிற்கு சென்று வருவது சிரமம். இப்படி ஒரு நிலையில் அவர்களுக்கு நல்ல உணவை வழங்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் முடிவு செய்து உள்ளனர். எனவே 200 போலீசாருக்கு பிரியாணி பொட்டலம் கட்டி அதனுடன் தண்ணீர் பாட்டிலையும் வழங்கி உள்ளனர்.

இது குறித்து கூறிய விஜய் ரசிகர் ஒருவர், கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருடைய பங்குதான் அதிகம். ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்னு போலீஸார் நமக்காகப் போராடுறாங்க. போலீஸ் வேலை பார்க்குற நண்பர்கள்கிட்ட கேட்டோம்.

சாப்பாடு எல்லாம் கிடைச்சிரும். ஆனா, நேரத்துக்குக் கிடைக்காது. கிடைக்கிறப்ப சாப்பிடணும். பிரியாணி எல்லாம் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க. அப்பதான் போலீஸாருக்கு பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம்...காவலர்களும் மனதார வாங்கிக்கொண்டதில் மகிழ்ச்சி என தெரிவித்து உள்ளார்.