புகுந்த வீடாக மாறிய காவல் நிலையம்....! 

செங்கல்பட்டு காவல்நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு தடபுடலாக வளைக்காப்பு நிகழ்ச்ச நடத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்ததாகக் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி  இருவரும்  தனகாலத்து வீட்டாருடன்  பேச்சு வார்த்தையில் கூட இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

தற்போது இலக்கியா செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இலக்கியா அவருடைய வருத்தத்தை சக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இலக்கியாவிற்கு சக போலீசார்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு செய்துள்ளனர். இதற்காக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஒன்றிணைந்து காவல் நிலையத்திலேயே வளைக்காப்பு செய்து கர்ப்பிணி பெண்ணை வாழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.