ஆண்மை பிரச்சனையில் மஞ்சள் செய்யும் அற்புதம் என்ன தெரியுமா..? 

ஆண்கள் கருதும் பெரும் பிரச்சனையான ஆண்மை குறைவிற்கு மிக பெரிய தீர்வாக அமையும் மஞ்சள் என்பது நமக்கு தெரியுமா ..? 

நாம் உண்ணும் உணவு முறையில் மாற்றம், ஓய்வு  இல்லாமல் இயந்திரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து அதிக அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தம்பதிகள் இடையே தாம்பத்ய உறவு என்பது ஏதோ ஒரு வகையில் பாதிக்கபடுகிறது

அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு  இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்.

ஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்க்கும் போது ஆணுருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். இதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

பொதுவாகவே மஞ்சளை உணவிலும் சேர்த்து பயன்படுத்தி வருவதால், புற்று நோயில் இருந்து  நம்மை எளிதில் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் செய்யும்