Asianet News TamilAsianet News Tamil

கிராமுக்கு ரூ.1,500 லாபம்... இன்றே கடைசி நாள்... மிஸ் பண்ணீடாதீங்க மக்களே..!

கிராமுக்கு 800 ரூபாய்க்கு மேல் லாபம் கொடுக்கும் மத்திய அரசின் தங்கப் பத்திரத்தை வாங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 
 

Today is the last day for the gold bond program
Author
Tamil Nadu, First Published Jul 12, 2019, 4:07 PM IST

கிராமுக்கு 800 ரூபாய்க்கு மேல் லாபம் கொடுக்கும் மத்திய அரசின் தங்கப் பத்திரத்தை வாங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

 Today is the last day for the gold bond program

பணத்துக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமான வழிகளில் ஒன்று. அதற்காக தங்கத்தை ஆபரணங்கள், நாணயங்கள் அல்லது வேறு பொருட்கள் வடிவில் வாங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பயன் அளிக்கும் நோக்கில் மத்திய அரசு அளிக்கும் திட்டம்தான் தங்கப் பத்திரத் திட்டம். 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தில் தங்கத்தை பொருளாக வாங்காமல் பத்திரமாக வாங்கி முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து திட்டத்தின் முழு முதிர்வுக் காலத்தில் அதன் பலனைப் பெறலாம். Today is the last day for the gold bond program

இத்திட்டத்தின் கீழ் ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே தங்கப் பத்திரங்களை மத்திய அரசு விற்பனை செய்யும். இந்த ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

அதாவது இன்றுடன் தங்கப் பத்திர விற்பனை முடிந்துவிடும். இந்த நாட்களுக்குள் தங்கப்பத்திரம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி தங்கப் பத்திரம் கிடைக்கும். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது என்பதால் இதில் முதலீடு செய்வது நிச்சயம் லாபகரமாக அமையும். இது அரசு வழங்கும் திட்டம் என்பதால் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும். Today is the last day for the gold bond program


2014ல் இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அடுத்த ஆண்டுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது. அப்போது அவர்கள் தங்களிடம் உள்ள பத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தால்கூட கிராமுக்கு 800 ரூபாய்க்கு மேல் லாபம் பெறுவார்கள். எட்டு ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 1500 ரூபாய் வரை லாபம் பெற வாய்ப்பு இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios