Asianet News TamilAsianet News Tamil

Kubera Blessings: வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க, பாவங்கள் நொடியில் தீர..இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்

Kubera Blessings: நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க நாம் செய்யும் சில பழக்கவழக்கங்களை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

To get the blessings from goddess lakshmi and kubera follow these steps
Author
Chennai, First Published Jun 25, 2022, 11:13 AM IST

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், எல்லோரும் ஓடிஓடி உழைத்து பணம் சேர்க்க முயற்ச்சி செய்கின்றனர். ஆனால், நம் கையில் பணம் தங்குவதற்கு இறைவனின் அருள் இருக்க வேண்டும். இறைவன் அருள் இருந்தால், பிச்சை எடுத்தவனும் பணம் சம்பாதிக்கலாம். கோடீஸ்வரரும் பிச்சை எடுக்கலாம். சிலர், வீட்டில்மனதில் நிம்மதி இருக்காது. சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுடைய வீட்டில் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். 

To get the blessings from goddess lakshmi and kubera follow these steps


 
மகாலட்சுமி மற்றும் குபேரன் அருள் பெறுவதற்கு செய்ய வேண்டியவை:

அனைத்து தெய்வங்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி தான். எனவே இவர்களின் அருள் இருந்தால் மட்டுமே பணம் நமது கையிலும், நமது வீட்டிலும் நிரந்தரமாக தங்கும். அதேபோல் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க நாம் செய்யும் சில பழக்கவழக்கங்களை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

To get the blessings from goddess lakshmi and kubera follow these steps

தேவையான பொருட்கள்:

முதலில், அகலமான மண் கிண்ணத்தை வாங்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் கல் உப்பு இருந்தால், அந்த மண் கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கல் உப்பின் மேல் 1/2 ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்த மஞ்சள் நிற கல் உப்பின் மேல் 11 மிளகுகளை, மேலே தெரியும் படி வைத்து விடுங்கள்.

செய்முறை:

இப்போது இந்த மண் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் ஈசானி மூலையில் வைக்கவும், குறிப்பாக எல்லோர் கண்களுக்கும் தெரியும் படி வைக்க வேண்டும். இவை உங்கள் வீட்டில் வரும் நபர்களின் கண் திருஷ்டியில் இருந்து உங்களை பாதுகாக்கும். இந்த மண் அகல் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் வைத்த பின்பு நிச்சயமாக நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். 

To get the blessings from goddess lakshmi and kubera follow these steps

வீட்டில், நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். சுப காரியங்கள் நடைபெறும். படிப்படியாக உங்களுக்கு சந்தோஷம் வந்து குவியும். வீட்டிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாடும். வாரம் ஒருமுறை வேண்டுமானலும் இந்த மாற்றி புதிய உப்பு, மிளகு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கலாம். 

குறிப்பு..அதே போன்று பழைய உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடவும்.

மேலும் படிக்க....Red Rice benefits: சிவப்பு அரிசியில் இத்தனை நன்மைகள் இருக்கா..? அடடே...இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...

Follow Us:
Download App:
  • android
  • ios