வெளியில் சுற்றி சுற்றி....3 ஆம் கட்டத்திற்கு "கொரோனாவை" கொண்டுபோகாதீங்க  மக்களே..!  

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இந்தியா முழுக்க 20 கும் அதிகமோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதில் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உயிரிழந்த அனைவரும் வயதானவர்களே. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பெரியோர்களை கொரோனா தாக்கும் போது அதனை சமாளிக்கும் சக்தி உடலில் காணப்படுவது இல்லை என்பதே..

அதிலும்.. சுவாச பிரச்சனை இருந்தால் மிக எளிதாக தாக்குகிறது கொரோனா. இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது என்னவென்றால், 

கொரோனா தொற்றில் தமிழக தற்போது 2ம் கட்டத்தை எட்டியுள்ளது. 3வது கட்டத்திற்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முக கவசங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில்10 மாவட்டங்களை சேர்ந்த 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்ததுள்ளார் 

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது வரை கொரோனா பரவுதல் இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது என்றும் அது மேலும் பரவாமல் தடுக்க அரசு தரப்பில் இருந்து பெரும் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது  எனவும் தெரிவித்துள்ளதை மக்கள் நினைவு கூர்ந்து, முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.