துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து திட்டமிடுவீர்கள். உங்களுடைய கனிவான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடும் திறன் கொண்டவர்கள் நீங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சுமூகமாக செல்லக்கூடிய நாளாக அமையும்.

விருச்சிக ராசி நேயர்களே..!

புதியவர்கள் அறிமுகமாவார்கள் உங்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் எல்லாம் உங்களை வந்து சேரும். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டிய பல முக்கிய திட்டங்களில் உங்களது பணத்தை முதலீடு செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களது குடும்பத்தில் அமைதி பிறக்கும் நாள் இது. உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுடன் மிகவும் கவனமாக பேசுவது நல்லது.

மகர ராசி நேயர்களே..!

உங்களுடைய வேலைச்சுமையால் அதிக சோர்வாக காணப்படுவீர்கள். உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறந்தது.

கும்ப ராசி நேயர்களே...!

வீண் அலைச்சல் ஏற்படும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணம் உங்களை வந்து சேரும். பல பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வை எட்டும் நாள் இது.

மீன ராசி நேயர்களே..!

உங்களை தேடி பல பொறுப்புகள் வரும். உங்களுடைய ஆலோசனையை கேட்க பலர் காத்திருப்பர். எப்போதும் நீங்கள் எடுக்கும் முடிவுதான் சரி என எனக்கு மன சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்.