இதை மட்டும் செய்யுங்க போதும்..!

முகத்தில் வரும் பருக்கள் முக அழகை கெடுக்கிறது என பலரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சரி வாங்க முகப்பரு வந்தால், அதை எப்படி ஒரே இரவில் விரட்டி அடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை..!

ஆப்பிள் சிடர் வினிகர் கொஞ்சம் எடுத்துக்கோங்க. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துக்கொண்டு, ஒரு காட்டன் கொண்டு எங்கு பரு உள்ளதோ..? அந்த பருவின் மீது கலந்து வைத்த வினிகரை கொஞ்சம் அப்ளை செய்யுங்கள். இதை அப்படியே பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள் போதும். பின்னர் நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பருவின் அளவு அப்படியே குறைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

முகப்பரு எதனால் வருகிறது?
 
தலையில் பொடுகு இருந்தாலோ, அல்லது சரும பிரச்சனை, சரியாக தூக்கம் இல்லாமல் போவது இது போன்ற காரணத்தால் முகப்பரு அதிகமா இருக்கும். சரி பிம்பிள்ஸ் வராமல் தடுக்க சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.பரு இருந்தால் scrub யூஸ் செய்ய கூடாது. ஸ்வீட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள். மேக் அப் போட்டுக்கொண்டு இரவில் உறங்குவதை தவிருங்கள்.

அதிக படியான எண்ணெய் பொருட்களை எடுத்துக்கொள்ள கூடாது. அதிகமான தண்ணீர் குடிங்க. இவை அனைத்தையும் செய்து வந்தால் போதும், முகப்பரு வராது.