ஆரோக்கியமான உணவுகள் சிறுநீரகம் மட்டுமின்றி உடலின் மற்ற பாகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் சில ஆரோக்கிய உணவுகளே கூட சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

அவகேடோ

அவகேடோ என்பது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பழம் நார்ச்சத்துக்களும், ஆன்டிஆக்சிடண்ட்களும் அதிகம் உள்ள இந்தப் பழத்தை சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.இதில் அதிக அளவு உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் அடைப்பை உண்டாக்கும். 

அடைக்கப்பட்ட உணவுகள் 

அடைக்கப்பட்ட உணவுகளில் அதிகளவு உள்ள சோடியம் மற்றும் உப்பு சிறுநீரக நலனுக்கு எதிரானது. அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

பழுப்பு அரிசி 

பழுப்பு அரிசி என்பது ஆரோக்கியமான தானியமாலும் இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகத்துக்கு ஆகாது.

வாழைப்பழம் 

வாழைப்பழமுமா என்று கேட்பது புரிகிறது.இதில் சோடியம் குறைந்தளவு இருந்தாலும் பொட்டாசியம் அதிக அதிகமாக இருப்பதால சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்தும். தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 

இறைச்சிகளை பதப்படுத்தும் பொருட்களில் அதிக உப்பு மற்றும் உலர்தன்மை இருக்கும். இதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் அதிகளவு புரோட்டின் சிறுநீரக கற்களை உருவாக்கும். 

உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கில் அதிக அளவு உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்துக்கு எதிரானது. உருளைக்கிழங்கை தண்ணீரில் நனைக்கும்போதும், சிறிதாக நறுக்கி வேகவைக்கும்போதும் பொட்டாசியத்தின் அளவு வெகுவாகக் குறைகிறது இருந்தாலும் அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சிறுநீரகத்துக்கு ஏற்புடையதல்ல.

தக்காளி

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது தக்காளி. இதில் உள்ள பொட்டாசியத்தின் அளவு சிறுநீரக கற்கள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புள்ளது,

உலர் பழங்கள் காயும்போது பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக பேரிச்சம்பழம் அதிகமாக சாப்பிடவேண்டாம்