கொரோனாவிடம் இருந்து தப்பிக்க "இந்த 8 பாயிண்ட் மிக முக்கியம்"...!  

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதை நம்மால் கண்கூடாகன் பார்க்கமுடிகிறது.ஒருவரிடமிருந்து மற்றவர்ககுக்கு பரவாமல் இருக்க சமூக விலகல் மிக முக்கியம் என தற்போது ஊரடங்கு உத்தரவில் நாம் இருக்கிறோம். இதனுடன் நாம் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டும் போதுமானது கிடையாது. அதே வேளையில் நம்மை நாமே தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.அந்த வகையில், கீழ் குறிப்பிட்டுக்கு உள்ள சில முக்கிய விஷயங்களை கடைபிடிப்பது மிகவும் நல்லது.


 
அதில், 

நாம் பயன்படுத்தும் செவி பொத்தான் (head set) தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அதில் உள்ள மைக் மற்றும் கேபிள் மேற்பரப்பை சானிடிசர் மூலம் சுத்தம் செய்யுங்கள்.

வீட்டு மேசையில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வீசுங்கள் 

எங்கு சென்றாலும் முகமூடி அணியுங்கள்.

உங்கள் தனிப்பட்ட ஒப்பனை கருவியை மற்றவர்களுக்கு பயன்படுத்த தராதீர்கள் 

உங்கள் நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள்

உங்கள் கார்களையும் பைக்குகளையும் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது நேரடி சூரிய ஒளியின் கீழ் நிறுத்துங்கள்.

தனிப்பட்ட தேநீர் கோப்பைகளைப் போலவே, உங்கள் உணவிற்கும் தனிப்பட்ட தட்டுகளைப் பயன்படுத்துங்கள். 

ஒவ்வொரு நாளும் ஏராளமான தண்ணீர், எலுமிச்சை சாறு, அம்லா, மஞ்சள், மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
 
கடைசியில் மிக முக்கியம் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். இவை அனைத்தையும் நாம் கடை பிடித்தால் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.